வியாழன், 21 அக்டோபர், 2010

ராகிங்கில் ஈடுபட்ட 3 மாணவிகள் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் ராகிங்கில் ஈடுபட்ட 3 மாணவிகள் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் செவிலியர் மாணவி முத்துச்செல்வியை சீனியர் மாணவிகள் ராகிங் செய்துள்ளனர். நாளுக்கு நாள் இது அதிகரித்துள்ளது.

இதனால் மனம் உடைந்த முத்துச்செல்வி கடந்த சில நாட்களாக சோகமாக காணப்பட்டார். இந்நிலையில் இன்று ராகிங் கொடுமையால் முத்துச்செல்வி தூக்கி மாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

இதையறிந்த சக மாணவிகள் கொடுத்த தகவலின் பேரில், முத்துச்செல்வியை மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முத்துச்செல்விக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து போலீசார் முத்துலட்சுமியின் சக மாணவிகளிடம் விசாரித்துள்ளனர். இதையடுத்து முத்துலெட்சுமியை ராகிங் செய்த மாணவிகள் கனகவல்லி, ஜெயராதா, ரேவதியை போலீசார் கைது செய்தனர்.

ராகிங்கில் ஈடுபட்டதாக மாணவிகள் கைது செய்யப்பட்டிருப்பது, தூத்துக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக