ஞாயிறு, 17 அக்டோபர், 2010

Father S.J.Emanual:'பிரபாகரனை யேசுநாதருடன் ஒப்பிடலாம்' என வேத வாசகங்களைப் பொழிந்த (வணபிதா)

யேசு பாவிகளையும் மன்னித்து வரவேற்பாராக!

அருட்தந்தை எஸ் ஜே இம்மானுவேல் மீண்டும் கத்தோலிக்க மதத்துடன் இணைவு! - ரி கொன்ஸ்ரன்ரைன் -
'நான் முதலில் தமிழன் - பின்னர்தான் கிறிஸ்தவன்', 'பிரபாகரனை யேசுநாதருடன் ஒப்பிடலாம்' என வேத வாசகங்களைப் பொழிந்த (வணபிதா) பேராசிரியர் டாக்டர். எஸ் ஜே இம்மானுவேல் அடிகளார் மீண்டும் கத்தோலிக்க மதத்துடன் இணை வதை தற்போது பரவலாக அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

1950க்களில் லத்தீன் அமெரிக்காவில் உள்ள ரோமன் கத்தோலிக்க தேவாலயங்களில் 'இறையியல்' ஒரு புரட்சிகர வடிவத்தை எடுக்க ஆரம்பித்தது. 'விடுதலை இறையியல்' என்ற கருத்தாக்கம் உருவானது. இது காலப்போக்கில் லத்தீன் அமெரிக்காவையும் தாண்டிய சர்வதேச கருத்தாக்கமானது. 'கிறிஸ்தவ மத நம்பிக்கையை ஏழைகளின் துன்பம், அவர்களின் போராட்டம், நம்பிக்கை, சமூகத்தை விமர்சனப் பார்வையுடன் அணுகுவது என்ற அடிப்படையில் ஏழைகளின் கண்களினூடாக கத்தோலிக்க மதமும் கிறிஸ்தவமும் பார்ப்பதுவே 'விடுதலை இறையியல்' எனப்படுகின்றது.'

சமூக அநீதிகளுக்கு எதிரான ஒரு உள்ளுணர்வாக இந்த இறையியல் பலம்பெற்றது. இது லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து இலங்கை போன்ற நாடுகளுக்கும் பரவியது. இந்த 'விடுதலை இறையியல்' அடிப்படையில் இலங்கையின் தமிழ் பகுதிகளில் இருந்த கத்தோலிக்க மத நிறுவனம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்கும் நிலையை எடுத்தது.

ஆனால் பின்னான காலகட்டத்தில் விடுதலை அமைப்புகளே மக்களது துன்பங்களுக்கும் கொலைகள் மனித உரிமை மீறல்கள் போன்றவற்றுக்குக் காரணமாக இருந்த போதும் இந்த மத நிறுவனத்தினால் முழுமையாக தங்களை விடுவித்துக்கொள்ள முடியவில்லை. விரும்பியும் விரும்பாமலும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தமிழ் கத்தோலிக்க மத நிறுவனம் நெருங்கி நின்றதற்கு இதுவே காரணம்.

ஆனால் எஸ் ஜே இமானுவல் அடிகளார் . அருட்தந்தை கஸ்பார் போன்றவர்கள் தங்களது சொந்த விருப்பம் காரணமாக தங்களையும் தாங்கள் சார்ந்த மத நிறுவனத்தையும் தம் சொந்த நலன்சார்ந்து பயன்படுத்திக் கொண்டனர்.

கடந்த சில வருடங்களாக புலம்பெயர் தமிழர்களின் புலன்பெயர்வை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி அவர்களை உசுப்பேத்தி உசுப்பேத்தி லண்டன் , பாரிஸ் , ஜேர்மன் நகரங்களில் நடுறோட்டில் படுக்கவைத்து ஆட்டம் ஆடி கூத்தாடி தாம் வாழும் தமக்கு தஞ்சம் கொடுத்த நாடுகளுக்கே இடைஞ்சலாக இருந் த சம்பவங்களில் எஸ் ஜே இம்மானுவேலின் பங்கு முக்கியமானது.

கடந்த பல வருடங்களாக ஜேர்மனியில் இருந் து கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரச்சார சக்கரத்தைச் சுற்றியவர் எஸ் ஜே இம்மானுவேல் அடிகளார். பணத்தை மட்டும் அடிப்படையாக வைத்து எவ்வித அரசியல் அறிவோ சாணக்கியமோ அல்லது மொழித்திறனோ அற்ற புலம்பெயர் புலி வால்களுக்கு உயர் கல்வித் தகைமையும் அதீத பேச்சாற்றலும் பலமொழித் திறமையும் கொண்ட அதிலும் குறிப்பாக ஒரு கத்தோலிக்க உயர் குருவானவர் கிடைக்கப்பெற்றது ஒரு வரப்பிரசாதமாக கருதப்பட்டது. வுணபிதா எஸ் ஜே இம்மானுவேலின் தகமையுடனும் அனுபவத்துடனும் எந்த புலி பிரமுகரும் ஈடாக இருக்கவில்லை. இதனால் Global Tamil Forum (GTF) (உலக தமிழ் பேரவை) இன் தலைமை எஸ் ஜே இம்மானுவேலுக்கு பொன் தகட்டில் வைத்துக் கொடுக்கப்பட்டது.

GTF பிரித்தானியாவில் இயங்கிவரும் British Tamil Forum, Tamils For Conservative,
Tamils For Labour போன்ற அமைப்புக்கள் போன்றதொரு விடுதலைப் புலி ஆதரவு அமைப்பே. ஆக மொத்தமாகக் கூட்டிக் கழித்துப் பார்த்தால் வணபிதா இம்மானுவேல் புலன்பெயர் தமிழர்களின் தேசியத்தலைவர். இம்மானுவேல் அடிகளார் Global Tamil Forum (GTF) என்ற நெடியவன் குழுவின் தலைவர் என South Asia Intelligence Review இதழில் குறிப்பு உள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளால் சர்வதேச விடயங்களுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டவரே நெடியவன் என்கின்ற பேரின்பநாயகம் சிவபரன். தற்போது இவரும் இவரைச் சார்ந்த குழுவினருமே தமிழீழ விடுதலைப் புலிகளின் பெரும்பான்யையை கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இவர்களே எஸ் ஜே இமானுவலின் பின்னிருந்து உலகத் தமிழர் பேரவையை இயக்குகின்றனர். இவர்கள் இலங்கையில் மீண்டும் குண்டுகளை வெடிக்க வைத்து 'பனைமரத்தில வெளவாலா தலைவருக்கே சவாலா! தலைவர் வந்துவிட்டார். பராக்! பராக்!!' என்று பறைசாற்ற நேரம் பார்த்துக் காத்திருக்கின்றனர்.

உலகத் தமிழ் பேரவையின் கீழ் இணைந்துள்ள அமைப்புகள்: AustralianTamil Congress, British Tamils Forum, CanadianTamil Congress, Danish Federation of Tamil Associations, House of Eelam Tamils, NorwegianCouncil of Eelam Tamils, New Zealand Tamil Society, Wellington Tamil Society, Swedish Tamil Forum, Malaysia - Tamils Relief Fund, United States Tamil Political Action Council, European Tamil Union, Tamil Cultural Centre.

எஸ் ஜே இம்மானுவேல் 18 மே 2009 ற்க்கு பின்னால் உத்தியோகபுர்வ விடுதலைப் புலிகளின் பிரிவு ஒன்றுக்கு தலைவர் என்பது ஆதாரத்தடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. எஸ் ஜே இம்மானுவேல் தலைமை தாங்கும் GTF ‘Protest Sri Lankan Goods’, ‘Protest Sri Lankan Airways’ என்ற மண் கவ்விய பிரச்சாரங்கள் நடாத்தியது என்பது முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டியதாகும்.

அதுமட்டுமல்லாமல் புலம் பெயர் சமூகத்தின் பெரிய மோசடிகளில் ஒன்றான வணங்காமண் செயற்குழுவிற்க்கு பின் பலமாக British Tamil Forum - BTF இருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது, BTF, GTF என்பன ஒரே அமைப்புகள். மேலும் BTF, இன் தலைவராக நியமிக்கப்பட இருந்த எதிர்வீரசிங்கம் வணங்கா மண் முக்கியஸ்தர் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே வணங்கா மண் கொள்ளைக்கு பின்னணியில் எஸ் ஜே இம்மானுவேல் அடிகளார் இருப்பது நிரூபணம்.

எஸ் ஜே இம்மானுவேல், அமெரிக்காவில் வசிக்கும் உருத்திரகுமார் கூட்டாகவே Trasnational Government அமைக்க, இதன் முதற் கருவின் கதாநாயகன் கேபி. கேபி கைது செய்யப்பட்டதன் பின்னால் எஸ் ஜே இம்மானுவேல் உருத்திரகுமார் கூட்டே இன்றய விடுதலைப் புலிகளின் சுழியோடிகள். இன்னொரு வகையில் கூறப்போனால் எஸ் ஜே இம்மானுவேல், உருத்திரகுமார், நெடியவன் கைகளிலேயே புலிகளின் பெருவாரியான பணம் தங்கிப்போயுள்ளது.

ஏனவே இன் றைய யாழ் - மன்னார் கத்தோலிக்க பீடமும் தம்மை எஸ் ஜே இம்மானுவேலுடன் இணைத்துக்கொள்வது ஊகிக்கக் கூடியதே. வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் செய்த கொடுமைகளை அப்பட்டமாக மறைத்தது மட்டுமல்ல அவற்றை நியாயப்படுத்தி பிரச்சாரம் செய்த முக்கிய நபர்களில் எஸ் ஜே இம்மானுவேல் முக்கியமானவர்.

உலகில் உள்ள சகல அரசசார்பற்ற பெரும் ஸ்தாபனங்களும், முக்கிய நாடுகளும், விடுதலைப் புலிகளை கண்டித்தபோது 'மக்களோடு புலிகள், மக்களே புலிகள்' என புலம்பெயர்ந்து நாடகளிலிருந்து உசுப்பேத்திய பல ஆயிரம் தமிழ் மக்களை கொல்வதில் எஸ் ஜே இம்மானுவேலுக்கு பாரிய பங்கு இருக்கிறது. ஒரு தமிழன் என்ற முறையில் ராஜபக்ச சகோதரர்கள் கையில் உள்ள இரத்தக்கறையைவிட இவரின் கையில்தான் அதிக இரத்தகறை இருக்கிறது.

போரின் உச்சக் கட்டத்தில் சென்ற வருடம் மார்ச் மாதம் வவுனியா கிளிநொச்சி பகுதியில் முள்ளிவாய்க்காலில் இருந்து தப்பிவந்த மக்களை நேரடியாக சந்தித்தவுடன், நான் அவர்கள் தப்பி ஓடும்போது (புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிறிலங்கா இராணுவத்தின் பிரதேசத்திற்குள்) புலிகள் செய்த அட்டூழியங்களை நேரடியாக விபரிக்க கேட்டவன். விடுதலைப் புலிகள் தப்பி ஓடும்போது மக்களை நோக்கி சுட்டதையும் அடித்ததையும் வடுக்களுடன் பார்த்த எனக்கு எஸ ஜே இம்மானுவேல் போன்றோர் புலிகளின் வக்கிரத்தை நியாயப்படுத்துவது புலிகளின் பயங்கரவாதத்தைவிட அகோரமானது.

மனிதப் படுகொலைகள் உக்கிரமாக நடந்து கொண்ட கடைசி நாட்களிலாவது பிரகாரனின் விசுவாசிகளாக இருந்த எஸ் ஜே இம்மானுவேல் போன்றோர் சற்று நேர்மையான முறையில் பிரச்சினைகளை அணுகி இருக்கலாம்.

அண்மையில் லண்டனில் யாழ் புனித பற்றியரசர் கல்லுரி (சென் பற்றிக்ஸ்) அதிபருக்கு அளிக்கப்பட்ட கௌரவ விருந்தோன்பிலும் மற்றும் அண்மையில் காலம் சென்ற மூத்த குருவானவர் வணபிதா மதுரநாயகம் அவர்களின் மறைவை ஒட்டி இடம்பெற்ற இரு வைபவங்களிலும் எஸ்ஜே இம்மானுவேல் முக்கிய பிரதிநிதியாக வந்திருந்தார். இவ்வாறான மதச்சடங்குகளில் நான் எஸ் ஜே இம்மானுவேலை கடந்த 25 வருடங்களாக புலம்பெயர்ந்த மண்ணில் காணவில்லை. நான் இவரை கண்டது எல்லாம் அரசியல் கூட்டங்களில் தான்.

'பாவிகளையும் யேசு மன்னித்து இரட்சிப்பார' என்ற வேதவாக்கை நம்பித்தான் எஸ் ஜே இம்மானுவேல் அடிகளார் கத்தோலிக் மதத்துடன் இணைந்து கொண்டால் நல்ல விடயம் தான். அதற்கு மாறாக எஞ்சியுள்ள தமிழ் மக்களை இன்னுமொரு முள்ளிவாய்க்காலுக்கு அழைத்து செல்லத்தான் வந்துள்ளாரோ என்பதற்க்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக