யோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ரணில் ஐரோப்பா செல்கிறார்
எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று ஐரோப்பா செல்கிறார். அவர் தனது இந்த விஜயத்தின் போது சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரத்தில் பொதுநலவாய பாராளுமன்ற குழுவினருடன் சந்திப்புக்களை நடத்தவுள்ளார். எதிர்கட்சித் தலைவர் எதிர்வரும் 27ம் திகதிவரை ஐரோப்பாவில் தங்கியுருப்பதுடன், பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளுக்கும் விஜயம் செய்யவுள்ளார். இவர் தனது பிரித்தானிய விஜயத்தின் போது பிரதமர் டேவிட் கெமரூன் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களை சந்திக்கவுள்ளார்.
பின்னர் நோர்வே செல்லவுள்ள எதிர்கட்சித் தலைவர் அந்த நாட்டின் சர்வதேச அபிவிருத்தித் தொடர்பான அமைச்சர் எரிக் சொல்ஹேமை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.
பின்னர் நோர்வே செல்லவுள்ள எதிர்கட்சித் தலைவர் அந்த நாட்டின் சர்வதேச அபிவிருத்தித் தொடர்பான அமைச்சர் எரிக் சொல்ஹேமை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக