ஞாயிறு, 17 அக்டோபர், 2010

Kotahena வர்த்தகரை கடத்தி கப்பம் கோரிய இராணுவ மேஜர் ஒருவரை காவல்துறையினர் கைது

வர்த்தகர் ஒருவரை கடத்தி அவரிடம் கப்பம் கோரிய இராணுவ மேஜர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.பிரபல நகை வியாபாரி ஒருவரை கடத்திச் சென்று 50 மில்லியன் ரூபா கப்பம் கோரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.கடத்தல் மற்றும் கப்பம் கோரலை மேற்கொண்ட இராணுவ மேஜருடன் மேலும் இரண்டு நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடத்தப்பட்ட வர்த்தகரிடமிருந்து குறித்த கும்பல் ஏற்கனவே 20 மில்லியன் ரூபாவினை கப்பமாகப் பெற்றுக் கொண்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமது மகனை பாடசாலைக்கு அழைத்துச் சென்ற போது கடத்தல்காரர்கள் குறித்த வர்த்தகரை கடத்திச் சென்றுள்ளனர்.

50 மில்லியன் ரூபா கப்பமாக வழங்குமாறு குடும்பத்தாருக்கு உத்தரவிடுமாறு கடத்தல்காரர்கள், வர்த்தகரை வற்புறுத்தியுள்ளனர். எனினும், அவ்வளவு பெரிய தொகை பணத்தை தமது குடும்பத்தாரினால் திரட்ட முடியாது எனவும், நகைகக் கடைக்கு தாம் சென்றால் மட்டுமே பணத்தை திரட்ட முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் பின்னர், கடுமையான நிபந்தனைகள் மற்றும் கொலை மிரட்டலுடன் குறித்த வர்த்தகரை காவல்துறையினர் விடுதலை செய்துள்ளனர். முன்னணி தனியார் வைத்தியசாலை ஒன்றில் வைத்து கப்பப் பணத்தை இராணுவ மேஜரிடம் குறித்த வர்த்தகர் ஒப்படைத்தாகவும், சிவில் உடையணிந்திருந்த புலனாய்வுப் பிரவினர் இராணுவ மேஜரை கைது செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இராணுவ மேஜருடன் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் மேலும் இரண்டு பேரை காவல்துறையினர் தேடி வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக