வெள்ளி, 22 அக்டோபர், 2010

தொல். திருமாவளவன ராஜபக்சேவுடன் டீ-வடை சாப்பிட்டு

இலங்கைக்கு சென்று ராஜபக்சேவுடன்
டீ-வடை சாப்பிட்டு விட்டு வேறு எதுவும் பேசாமல் மவுனமாக இருந்துவிட்டு வந்தார் தொல். திருமாவளவனுக்கு
காங்கிரஸ் கட்சியை விமர்சிக்க விடு தலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனுக்கு அருகதை இல்லை. அவர் தனது எம்.பி. பதவியை ராஜி னாமா செய்து விட்டு பின்னர் காங்கிரஸை விமர்சிக்கட்டும் என்று மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சி 125 வருட பாரம்பரிய மிக்கது. அந்த கட்சியை விமர்சிக்க யாருக் கும் தகுதியில்லை. காங்கிரஸ் தயவால் எம்.பி. யான திருமாவளவன் அந்த கட்சியை விமர் சிக்கிறார். வேண்டுமென்றால் தனது பதவி யை ராஜினாமா செய்துவிட்டு விமர்சிக் கட்டும். இலங்கைக்கு சென்று ராஜபக்சேவு டன் டீ-வடை சாப்பிட்டு விட்டு வேறு எது வும் பேசாமல் மவுனமாக இருந்துவிட்டு, இங்கே வந்து கடுமையாக விமர்சிக்கிறார். நேருக்கு நேர் அங்கேயே பேச வேண்டியது தானே.

கலைஞருக்கு இவர் ஆலோசனை கூறு கிறார்.
காங்கிரஸை விட்டு விலகுவோம் என்று கலைஞருக்கு இவர் ஆலோசனை கூறவேண்டியதுதானே. அப்படி கூறினால் தான் கலைஞர் ஏற்றுக்கொள்வாரா. இவர் நாடாளுமன்ற உறுப்பினரானதற்கு காங்கி ரஸ்தான் காரணம். பதவி
மட்டும் வேண் டும்; அப்பதவி வருவதற்கு காரணமாக இருந்த காங்கிரஸ் கட்சி மட்டும் வேண் டாமா என அவர் வினா எழுப்பினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக