வெள்ளி, 22 அக்டோபர், 2010

முழுமையான அதிகாரங்கள் கிடைத்தால் புலிகளை மக்கள் ஏற்கப்போவதில்லை – சுரேஸ் எம்.பி. செவ்வி

தமிழ் மக்கள் முழுமையான உரிமைகள் கொடுக் கப்பட்டு அதிகாரங்கள் வழங்கப்பட்டு வடக்கு-கிழக்கு பகுதிகளில் சரியான அரசியல் நிர்வாக முறை உருவாக்கப்படுமாக இருந்தால் விடுதலைப் புலிகளை மக்களோ யாரோ அங்கீகரிக்கப் போவதும் இல்லை.   வரவேற்கப்போவதும் இல்லை.      யுத்தத்தை ஏற்றுக் கொள்ளப் போவதும் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
மற்றொரு யுத்தத்தை எதிர்பார்த்து அரசாங்கம் தன்னை பலப்படுத்துவது முட்டாள் தனமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழ் மிரர் இணையத் தளத்திற்கு அளித்த விசேட செவ்வியில் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகை யில்,புதிய வரவு-செலவுத் திட்டத்தில் கடந்த வருடத்தைவிட பாதுகாப்புக்கு கூடுதலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.எந்தவொரு நாட்டிலும் யுத்தம் முடிந்தபின் பாதுகாப்புச் செலவு குறையுமே தவிர அதிகரிக்காது.ஆனால் இங்கு அது அதிகரிக்கிறது.
விடுதலைப் புலிகள் மீண்டும் ஒன்று சேர்ந்து பலப்படுத்த விடக்கூடாது என்று அரசாங் கம் கூறுகிறது.     புலம்பெயர்ந்த மக்கள் விடு தலைப்புலிகள் பலமாக இருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். அதேசமயம் யுத்தம் முடிந்து 16 மாதங்கள் கடந்துவிட்டது.     ஒரு சிறிய துப்பாக்கி சத்தம் கூட கேட்கவில்லை என்றும் அரசாங்கம் கூறுகிறது.   13 ஆயிரம் புலி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் கூறுகிறது.    இந்நிலையில் இவ்வளவு தொகை பணம் ஒதுக்கி மீண்டும் ஒரு தடவை புலிகள் இயக்கம் வந்துவிடும் என்ற கோணத்தில் சிந்திப்பது பிழையான முன்மாதிரி.
பிழையான தொடக்கம்.
தமிழ் மக்களுக்கு முழுமையான உரிமைகள் கொடுக்கப்பட்டு, அதிகாரங்கள் வழங்கப்பட்டு வடக்கு -கிழக்குப் பகுதிகளில் சரியான அரசியல் நிர்வாகமுறை உருவாக்கப்படுமாக இருந்தால் விடுதலைப் புலிகளை மக்களோ யாரோ அங்கீகரிக்கப்போவதுமில்லை. வரவேற்கப் போவதுமில்லை.   யுத்தத்தை ஏற்றுக்கொள்ளப் போவதுமில்லை.   ஆகவே அரசாங்கம் செய்யவேண்டிய வேலைகளை செய்யாமல் இன்னொரு யுத் தத்தை எதிர்பார்த்து தன்னைப் பலப்படுத்துவது என்பது உத்தியோகபூர்வமற்ற,  முட்டாள்தனமான ஒட்டுமொத்தமாக நாட்டையே அதலபாதாளத்தில் தள்ளுகின்ற  ,பொருளாதார வளர்ச்சியைக் காண்பதற்கான எவ்வித தூர நோக்கற்ற சிந்தனையாகவே இருக்கும்.
இராணுவத்தை பலப்படுத்த தேவையில்லை
யுத்தத்திற்கான சூழ்நிலை நாட்டில் இல்லை.  இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு வேறுபல வழிகள் இருக்கின்றன.அவற்றை விட்டுவிட்டு இராணுவத்தைப் பலப்படுத்துவது இப்படியான சிறிய நாட்டிற்கு இது தேவையல்ல.  இந்தியா,  அமெரிக்கா ,  ஐரோப்பா உட்பட பல நாடுகள், அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு காணுங்கள் ,    அந்தத் தீர்வு எட்டப்பட் டால் பல பிரச்சினைகள் தீர்ந்து விடும் என்று கூறுகின்றன. மக்களின் மீள்குடியேற்றம் புனர்வாழ்வு விடயங்களைப் பொறுத்தவரை,  சரியான நிகழ்சி நிரல்,  மக்கள் இந்த நாட்டின் குடிமக்களில் ஒரு பகுதியினர்.   அவர்களுக்கு உதவிகள் செய்து   அவர்களையும்   நாங்கள் பலப்படுத்த வேண்டும் என்ற சிந்தனை அரசாங்கத்திடம் இருப்பதாக நான் கருதவில்லை.
இடம்பெயர்ந்த மக்களில் ஒரு பகுதியினர் சொந்த இடங்களில் குடியேற விரும்பவில்லை என்று அரசாங்கம் கூறுவதும் நம்பக்கூடிய தல்ல.   சமஷ்டி முறையிலான அரசியலமைப் பின் மூலம் இனப்பிரச்சினைக்கு நீண்ட நிலைத்து நிற்கக்கூடிய தீர்வை காண முடியும்.
சமஷ்டி அரசியலமைப்பை ஏற்றுக் கொண்ட நாடுகள் எதுவும் தமது அபிவிருத்தியிலோ ஏனைய முயற்சிகளிலோ தோல்வியடைந்ததாக வரலாறு இல்லை.    எனவே இலங்கையில் சமஷ்டி அரசியலமைப்பை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று கூறுவது, அரசியல் சிந்தனையற்ற,வரட்டுத்தனமான , பிடிவாதமான எண்ணம் கொண்டவர்களின் நிலைப்பாடே தவிர, சமஷ்டி அரசியலமைப்பு என்பது சிறிலங்கா போன்ற நாடுகளுக்கு உன்னதமான நிலை.  ஆகவே சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வை தமிழ் தேசியக் கூட்ட மைப்பு வரவேற்கும்.
1987ஆம் ஆண்டு இலங்கை -இந்திய ஒப்பந்தத்தின் பின் அது போதாது அதற்கு மேலாக கொடுக்கப்படவேண்டும் என்ற அடிப் படையில் பிரேமதாச அவர்கள் செயற்பட்டிருக்கிறார்.பிரேமதாச முதல் திருமதி சந்திரிகா குமாரதுங்க,மகிந்த ராஜபக்ச ஆகியோரும் செயற்பட்டிருக்கின்றனர்.இது தொடர்பான பல அறிக்கைகள் வெளிவந்திருக்கின்றன. அந்த அறிக்கைகள் எல்லாம் 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு மேலதிகமாக தமிழ் மக் களுக்கு அதிகாரம் வழங்கினால்தான் இனப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்க முடியும் என்ற அடிப்படையிலேயே வந்தன.
இவையயல்லாம் இருக்கும்போது இன் னும் பல கட்சிகள் கூடிப் பேசவேண்டும் என்பது காலத்தை விரயமாக்குகின்ற விடயமா கவும்,நம்பிக்கை தகர்ந்து போகின்ற விடய மாகவும் உண்மையாகவே இவர்கள் செய்வார்களா என்ற கேள்விக்குறியை உருவாக் குகின்றது எனவும் அவர் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக