வியாழன், 14 அக்டோபர், 2010

ஒல்லாந்தர் கால பீரங்கிக் குண்டுகள் யாழ்.கோட்டையில் இருந்து மீட்பு

யாழ்.கோட்டையின் இடிபாடுகளுக்கிடையிலிருந்து ஒல்லாந்தர் காலத்துப் பீரங்கிக் குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கோட்டையின் புனரமைப்புப் பணியின் போது தொல்லியல் பொருள்கள் ஏதாவது இருக்கின்றவா என்பதைக் கண்டு பிடிப்பதில் ஆராச்சியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதன் போதே இந்தக் குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
கோட்டையின் சுற்று மதில்களைப் புனரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இடிக்கப்பட்ட சில இடங்களில் ஒல்லாந்தர் பாவித்த பழைமை வாய்ந்த பீரங்கிக் குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
கோட்டையைச் சுற்றியுள்ள அகழியைத் தோண்டி புனரமைக்கும் பணிகள் இந்த வருட இறுதிக்குள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த அகழி புனரமைப்புக்கு முன்னர் அப்பகுதியில் வெடி பொருள்கள் இருக்கின்றனவா என்ற சோதனை நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக