வியாழன், 14 அக்டோபர், 2010

குளித்தலை அருகே இலங்கை அகதிகள் முகாமில் ஒருவர் தற்கொலை

குளித்தலை அருகே உள்ள இரும்பூதிப்பட்டி இலங்கை [^] அகதிகள் முகாமில் ஒருவர் தற்கொலை [^] செய்து கொண்டார்.

குளித்தலை அருகே உள்ளது இரும்பூதிப்பட்டி. இங்கு இலங்கை தமிழர்களுக்கான அகதிகள் முகாம் உள்ளது.

இந்த முகாமில் உள்ள 11-வது குடியிருப்பில் வசிப்பவர் சுப்பிரமணி (55). இவருக்கு கடந்த சில மாதங்களாக வயிற்று வலி இருந்ததாகக் கூறப்படுகின்றது. இதனால் அவர் கடும் அவதிப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

இந்த நிலையில் அவரது வீட்டின் அருகே உள்ள குடிநீர் தொட்டியின் இரும்பு படிக்கட்டில் வேட்டியால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை [^] நடத்தி வருகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக