வியாழன், 28 அக்டோபர், 2010

'ஆதிபகவன்'.சிகரெட் குடிக்கனும் - ஹீரோயினுக்கு அமீர் கண்டிஷன்!



     ருத்திவீரன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்னர் அமீர் இயக்கிகொண்டிருக்கும் படம் 'ஆதிபகவன்'. இடையில் அமீர் நாயகனாக நடித்த யோகி படம் பாராட்டுக்களை பெற்றாலும் வியாபார ரீதியாக தோல்வியை சந்தித்தது. தன் அடுத்தக்கட்ட முயற்சியான 'ஆதிபகவன்' படத்தின் ஷூட்டிங்கில் படு பிஸியாக இருந்துவருகிறார் அமீர்.

 

இதில் ஜெயம் ரவி தாடிவைத்து வித்தியாசமான கெட்டப்பில் நடிக்கிறார். படத்தின் கதாநாயகி நீத்து சந்திரா. இதன் படப்பிடிப்பு தற்போது தாய்லாந்து நாட்டின் பட்டாயா கடற்கரையில் நடந்து வருகிறது.

படத்தின் ஒரு காட்சியில் நீத்து சந்திரா சிகரெட் குடிக்க வேண்டும். ஆனால், அவரோ நான் சிகரெட்டை கையால்கூட பிடித்ததில்லை என்று அமீரிடம் சாக்கு சொல்ல, அமீர் விடவில்லை. சிகரெட் குடித்தே ஆகவேண்டும் என்று அமீர் கண்டிஷன் போட்டார். பிறகு எப்படி சிகரெட் குடிக்க வேண்டும் என்று நீத்துவுக்கு சொல்லிக் கொடுத்தார் அமீர். இந்த காட்சிக்கு பல டேக்குகள் வாங்கிய நீத்து சந்திரா, மொத்தம் 28 சிகரெட்டுக்களை குடித்துமுடித்தார். 

ஒரு வழியாக அமீரும் இந்த எதார்த்த காட்சியை சிறப்பான முறையில் எடுத்த திருப்தியில் இருக்கிறார். சேரன் நடிப்பில் 'யுத்தம் செய்' படத்தை இயக்கி முடித்திருக்கிறார் மிஷ்கின். 'யுத்தம் செய்' படத்தில் அமீரும் நீத்து சந்திராவும் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக