வியாழன், 28 அக்டோபர், 2010

ஆவி பயத்தில் மாடியில் இருந்த குதித்த 11 பேர்- குழந்தை பலி

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் புறநகரில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேர் 3-வது மாடியில் தங்கியுள்ளனர்.   சம்பவத்தன்று அதிகாலை அவர்கள் அனைவரும் டி.வி. பார்த்து கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு குழந்தை பசியால் அழுதது. உடனே அக்குடும்பத்தை சேர்ந்த ஆடை அணியாத நிர்வாண நபர் ஒருவர் குழந்தைக்கு பால் கொடுக்க பால் புட்டியுடன் எழுந்து சென்றார். அதே நேரத்தில் அவரது மனைவியும் அழும் குழந்தையை நோக்கி வந்தார்.
சுவற்றின்   நிழலில் நிர்வாண நபரின் உருவம் ஆவி (பேய்) போன்று தெரிந்தது.   இதனால் பயந்த அவரின் மனைவி பேய்… பேய்… என அலறினார்.   இதனால் டி.வி.பார்த்து கொண்டிருந்த குடும்பத்தினர் அலறியடித்தபடி பரபரப்புடன் எழுந்தனர்.   அப்போது நிர்வாண நபரை அவரது மைத்துனி கத்தியால் குத்தினார்.   உடனே,   அந்த நபர் வீட்டின் முன்புற கதவை  ‘டமார்’  என திறந்தார்.
இதை தொடர்ந்து வீட்டில்   இருந்த அனைவரும்   உண்மையில் பேய் நடமாட்டம் இருப்பதாக கருதினர். எனவே, தப்பிக்க 3-வது மாடியில் இருந்து ஒருவர் பின் ஒருவராக 11 பேர் குழந்தைகளுடன் கீழே குதித்தனர். இதில் அனைவரும் காயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி ஒரு குழந்தை பரிதாபமாக இறந்தது. காயம் அடைந்தவர்களுக்கு கை, கால்கள் மற்றும் உடலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக