வியாழன், 28 அக்டோபர், 2010

தியேட்டர் கட்டண கொள்ளைக்கு முடிவு கட்டப்படுமா? தீபாவளிக்கு மக்களிடம் எதிர்பார்ப்பு

தீபாவளிக்கு புதிய படங்கள் ரிலீசாகும்போதாவது, தியேட்டர்களில் நடக்கும் கட்டணக் கொள்ளையைத் தடுக்க தமிழக அரசு முன் வர வேண்டுமென்று பரவலாக கோரிக்கை எழுந்துள்ளது.தமிழகத்திலுள்ள தியேட்டர்களில் புதிய படங்கள் வெளியாகும் நாட்களில், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட, அதிக கட்டணம் வாங்கும் முறைகேடு, சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. கடந்த மாதத்தில் புதிய படம் ரிலீசானபோது, இந்த முறைகேடு உச்சக்கட்டத்தைத் தொட்டது.தியேட்டர்களுக்கு வெளியில் மட்டுமே அதிக விலைக்கு டிக்கெட் விற்கப்படுவது வழக்கமாக இருந்தது. ஆனால், சமீபத்தில் தியேட்டர் கவுன்டர்களிலேயே 100 ரூபாய் டிக்கெட், 500 ரூபாய்க்கு விற்கப்பட்ட சட்ட விரோதம், பகிரங்கமாக அரங்கேறியது. இந்த முறைகேடு நடப்பது தெரிந்தும், நடவடிக்கை எடுக்கும் தைரியம், எந்த அதிகாரிக்கும் இல்லை. மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்குத் தெரிந்தும் கூட, தடுப்பதற்கு உறுதியானநடவடிக்கை எடுக்கப்படவில்லை.பெயரளவுக்கு வருவாய்த்துறை அலுவலர்கள் சிலர், சில தியேட்டர்களில் சென்று கண் துடைப்புக்காக ஆய்வு நடத்தி, திரும்பினர்.

இதே மாவட்டத்தில், முன்பிருந்த கலெக்டர்கள் சிலர், நேரடியாக தியேட்டர்களுக்கு "விசிட்' அடித்து, அதிக கட்டணத்துக்கு டிக்கெட் விற்ற தியேட்டர் நிர்வாகங்களின் உரிமங்களை தற்காலிகமாக ரத்து செய்துள்ளனர்.ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களே திரைப்படத் தொழிலில் இருப்பதால், தியேட்டர் முறைகேடுகளைத் தடுக்கும் தைரியம், எந்த அதிகாரிக்கும் இல்லை. இந்நிலையில், கோவை நுகர்வோர் கோர்ட்டில் சமீபத்தில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு, பொதுமக்களுக்கு பெரும் தெம்பை அளித்துள்ளது. அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வாங்கிய தியேட்டருக்கு இந்த கோர்ட், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது.கூடுதலாக வாங்கிய தொகையையும் திருப்பித்தர உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை பொதுமக்கள் அனைவரும் வரவேற்றிருப்பதோடு, கூடுதலாக டிக்கெட் கட்டணம் வாங்கும் தியேட்டர் நிர்வாகத்தின் மீது நுகர்வோர் கோர்ட்டில் வழக்குத் தொடுக்கவும் பலர் தயாராகி வருகின்றனர். ஆனால், பல ஆயிரம் பேர், ஒரே கோர்ட்டில் வழக்குத் தொடுத்தால் நிலைமைஎன்னாகும் என்பது கேள்விக்குறி.அரசு நிர்ணயித்த கட்டணத்தின் படி, தியேட்டர்களில் 50 ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 85 ரூபாய் வரை மட்டுமே கட்டணம் வசூலிக்க முடியும். இதற்கு அதிகமாக வாங்கும் தொகை முழுவதுமே, சட்டவிரோதமாக வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணமாகவே கருதப்படும். ஆனால், சமீபத்தில் வெளியான திரைப்படத்துக்கு தியேட்டர் கவுன்டரிலேயே 400 ரூபாய், 500 ரூபாய்க்கு டிக்கெட் விற்கப்பட்டது.

இதுபற்றி, பல்வேறு ஊடகங்களிலும் செய்திகள் வந்தும் எந்த மாவட்ட நிர்வாகமும் கண்டு கொள்ளவில்லை. வரும் தீபாவளிக்கு ஏராளமான புதுப்படங்கள் வெளியாகவுள்ளன. அப்போதாவது, இந்த முறைகேட்டைத் தடுக்க மாவட்ட நிர்வாகங்களுக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டியது அவசியம். கேளிக்கை வரி விலக்கு, படப்பிடிப்புக் கட்டணம் குறைப்பு, பொது இடங்களில் படப்பிடிப்புக்கு அனுமதி, நலிந்த கலைஞர்களுக்கு வீடு என திரைத்துறையினருக்கு ஏராளமான சலுகைகளை வாரி வழங்கும் தமிழக அரசு, இந்த டிக்கெட் கட்டண விவகாரத்தில் மக்களுக்கு ஆதரவாக செயல்படாவிட்டாலும் சட்டத்தை அமல்படுத்தவாவது முன் வர வேண்டும் என்பதே தமிழக

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக