திங்கள், 18 அக்டோபர், 2010

சாய்பாபா சிலையில் விபூதி கொட்டியதால் பக்தர்கள் வியப்பு

சேலத்தில் உள்ள சாய்பாபா கோவிலில், பாபாவின் சிலையில் இருந்து விபூதி கொட்டியதைப் பார்த்து பக்தர்கள் ஆச்சரியமடைந்தனர்.சேலம் சூரமங்கலம் முல்லை நகரில், சீரடி சாய்பாபா கோவில் உள்ளது.இக்கோவிலில், விஜயதசமி நாளன்று பாபாவின் சமாதி நாள் விழா கொண்டாடப்படும்.நேற்று, சமாதி நாளையொட்டி பாபாவுக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கோவிலில் "துனி' என்ற இடத்தில் அமைந்துள்ள சாய்பாபா சிலையில் இருந்து திடீரென விபூதி கொட்டியது. முதலில் சிலையில் கட்டியிருந்த டர்பனில் இருந்து வந்தது. தொடர்ந்து முகத்தில், காதில் இருந்து கொட்டிய விபூதி, சிலையின் மீது படிந்து காணப்பட்டது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் இக்காட்சியைக் கண்டு அதிசயித்தனர். தகவல் பரவ, பொதுமக்களும் கோவிலுக்கு வந்து சாய்பாபாவை வணங்கிச் சென்றனர்.

இது குறித்து சாய்பாபா கோவில் டிரஸ்ட் நிர்வாகி மோகன் குறிப்பிடுகையில், "இங்கு மட்டுமல்ல, சாய்பாபா படங்களிலும் ஏதாவது அதிசயம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது'என்றார்.
கிருஷ்ண ராஜன் - bangalore,இந்தியா
2010-10-18 01:13:08 IST
சாய்பாபா அவர்கள் ஒரு சத்குரு, பேராற்றல் மிக்கவர், நம் ஒரே ரட்சகர் ஜெய் ஸ்ரீ சாய்நாத் மஹா ராஜ் கி ஜெ, ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய சாய் ஜெய ஜெய சாய்....
மீ.மணி வண்ணன் பஹ்ரைன் - மனாமா,பஹ்ரைன்
2010-10-18 01:02:55 IST
சத் குரு சாய் பாபா வின் அருள் . உலகம் முழுவதும் சாய் அருள் பரவி உலக மக்கள் சமாதனம் அடைய சத் குரு விடம் பிரார்த்திப்போம் சாய் ராம்....
ஷங்கர் - பெங்களூர்,இந்தியா
2010-10-18 00:54:43 IST
ஓம் ஷ்ரிடி சாய்ராம்!! ஷ்ரிடி சாய்பாபாவின் ஆசி கிடைக்க வேண்டுகிறேன். வாழ்க வளமுடன்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக