ஓப்போடு தேசம் நெற்றிற்கு
ஆனந்தசங்கரியுடனான ஒரு நேர்காணலை செப்டெம்பர் 4ல் நடாத்தி தற்போது தேசம் நெற்றில் அதன் ஆசிரியர்களில் ஒருவரான ஜெயபாலன் வெளியிட்டுள்ளார். நல்ல விடயம். ஒரு காலத்தில் ஆனந்தசங்கரியை இழிவுபடுத்தி கட்டுரை வெளியிட்டதில் தேசத்திற்கு பெரிய பங்கு உண்டு. புலிகளின் ஊடகங்களும் தேசம் நெற்றும் போட்டிபோட்டு அதனைச் செய்திருந்தன. இப்போது ஆனந்தசங்கரியை பேட்டிகண்டு தனது கடந்தகால செயலுக்கு பரிகாரம் தேடியிருக்கிறது தேசம் நெற்.
இதில் ஆச்சரியமான விடயம் ஒன்று நடைபெற்றிருக்கிறது. இந்த பேட்டி குறித்து எந்தவொரு கொமண்ட்சும் இதுவரை வரவில்லை. ஒன்று வந்திருந்த சங்கரியாருக்கு எதிரான விமர்சனங்கள் தடைசெய்யப்பட்டிருக்கவேண்டும். அல்லது பலபெயர்களில் கொமண்ட்ஸ் எழுதும் தேசம்நெற் குழவைச்சேர்ந்தவர்கள் நாம எடுத்த பேட்டிதானே எதற்கு இந்தாளை போட்டு விமர்சிப்பானேன் என அதனை நிறுத்தியிருக்கலாம். எதுவாக இருந்தாலும் தேசம் நெற் வசைபாடுகின்ற கொமண்ட்சுகளை சங்கரியார் விடயத்தில் நிறுத்தியதற்கு ஒரு ஓ போட்டு ஆகவேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக