திங்கள், 18 அக்டோபர், 2010

வந்தாரை வாழவைப்பானா யாழ்ப்பாணத்தான்?

  by teavadai
83ம் ஆண்டு வடக்கிலிருந்து தமிழர்கள் ஐரொப்பிய நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் கோரி ஓடியபோது அவர்களுக்கு உடை உணவு இடம் கொடுத்து அதரித்தன ஐரொப்பிய நாடுகள். தஞ்சம் கோரி போன தமிழன் (பெரும்பாலானவர் யாழ்ப்பாண´த்தான்) எங்கு அகதிக்காசு அதிகம் கொடுக்கிறார்கள் என இடம்பார்த்து அசைல் கேட்டான். சம்பாதிப்பதற்கு நாடு பாhத்து ஓடினான். 83 இனக்கலவரம் யாழ்ப்பாணத்தான் சம்பாதிப்பதற்கு வாய்ப்பானது. வறிய மக்கள் யுத்தத்தால் அழிய வசதியான தமிழன் புலம்பெயர்நாடுகளில் வளமாக வாழ்ந்தான். ஆகா புலி சண்டை காட்டி காசு சேர்த்தது. தாழ்த்தப்பட்ட மக்களினதும் வறியவர்களினதும் பிள்ளைகள் போராளிகளாக போராடப்போக யாழ்ப்பாணத்தான் புலம்பெயர்நாடுகளில் இருந்து பணத்தைக்கொடுத்து போக விரும்பாத தமிழீழத்திற்காக போராட்டத்திற்கு ஆதரவளித்தான்.
யாழ்ப்பாணத்தில் இருந்த முஸ்லீம் மக்களை ஐநூறு ருபாவுடன் எங்கேயாவது ஓடித்தொலை என 24மணித்தியாலத்திற்குள் ஊரைவிட்டு புலிகள் கலைக்க அது சரியென மௌனமாக இருந்தவன் யாழ்ப்பாணத்தான். பிழையென்று தெரிந்தவர்கள் மரணத்திற்கு பயந்து போய் இருந்தாhர்கள். பேக்கரி வைத்திருந்த சிங்களவர்கள் அதற்கு முன்னரே யாழப்பாணத்தை விட்டு ஓடிப்போய்விட்டார்கள்.
இப்ப சண்டை முடிஞ்சு போச்சு. கொஞ்ச சிங்களவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வந்திருக்கிறார்கள். முன்கூட்டி அறிவிக்காமல் வந்தது பிழை. திட்டமிட்ட செயல் என ஆளக்காள் விமர்சனம் செய்கிறார்கள்.      அட யாழ்ப்பாண்த்தானே ஐரொப்பிய நாடுகளுக்கு தஞ்சம் கேட்டு முன்கூட்டி அறிவிச்சா போனாய். ஆமி தேடுது பொலிஸ் தேடுது என பொய் சொல்லி தஞ்சம் கேட்ட யாழ்ப்பாணத்தான் 75 வீதம். உண்மையாக பிரச்சினையில் வந்தவன் 25வீதம். அப்பொழுது ஐரொப்பியன் அடே முன்கூட்டி அறிவிச்சா எங்களிட்ட வாறாய் என கேட்கவில்லையே. மனிதாபிமானத்துடன் தஞ்சமளித்தான்.
ஆனா யாழ்ப்பாணத்தில் 30 வருடங்களுக்கு முன்வசித்த சிங்களக் குடும்பங்கள் வந்தவுடன் என்ன கத்து கத்துறாங்கள். தஞ்சம் கொடுத்திட்டு போகவேண்டியதானே. வந்தவனுக்கு முதலில் சாப்பாடு. அதற்கப்புறம் தங்க ஒரு இடம். கொடுத்து தொலைக்கவேண்டியதில் என்ன இனவாதம் வேண்டிக் கிடக்கு.
83கலவரத்திற்குப் பின்பு கொழும்புக்கும் அதனைச்சுற்றியுள்ள இடங்களிலும் போய்க்குந்தி பாதுகாப்பாக 30வருடங்களாக யாழ்ப்பாணத்தான் வாழவில்லையா?. காணிகள் வாங்கவில்லையா? வீடுகள் கட்டவில்லையா? முதலில் மனிதாபிமானமாக சிந்தித்து நடக்கப்பழகவேண்டும். இனங்களுடன் ஐக்கியப்பட்டு வாழப்பழகவேண்டும். காசு வருதெண்டால் ஐரொப்பியனின் கக்கூசைக் கூட கழவத்தயாராக இருக்கிற யாழ்ப்பாணத்தான் சொந்த நாட்டில் என்ன மண்ணாங்கட்டி கௌரவம் பாக்கிறானோ தெரியவில்லை. ஏதெ சிங்களவன் வந்து தமிழனை இல்லாமல் பண்ணிவிடுவான் என்கிற காலங்காலமாக மண்டை கழண்ட அரசியல்வாதிகள் ஊட்டி வைத்து ஊத்தைகளை இன்னும் எத்தனை நாளுக்கு வைச்சுக்கொண்டிருக்கிறது.
அடிச்சுபிடிச்சு நாடுபிடிக்க வக்கில்லை. சேர்ந்த மற்றவர்களுடன் வாழுகின்ற பக்குவமுமில்லை. தன்ர சொந்த இனத்தோட ஒற்றுமையாக வாழ தெரியவில்லை. வாயால் கெட்டுத்தொலைஞ்சதுதான் மிச்சம். இப்ப சிங்களவன் வந்திட்டான் சொல்லாமல் வந்திட்டான் கூப்பாடு போட்டுக்கொண்டு ……..
எப்ப திருந்தி  உருப்படப்போறானோ தெரியவில்லை…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக