திங்கள், 18 அக்டோபர், 2010

ஷீலா தீட்சித்-கல்மாடி மோதல் : ரூ. 527 கோடி மோசடி அ

காமன்வெல்த் போட்டி ஊழல் தொடர்பாக, ஒருங்கிணைப்பு கமிட்டி தலைவர் சுரேஷ் கல்மாடி மற்றும் டில்லி முதல்வர் ஷீலா தீட்சித் இடையே பகிரங்க மோதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் மாறி மாறி புகார் கூறியுள்ளனர். இப்போட்டிக்கான மைதானங்கள் கட்டுவது உள்ளிட்ட 11 பணிகளில் 527 கோடி ரூபாய் மோசடி நடந்தது, அம்பலமாகியுள்ளது.
டில்லியில் 19வது காமன்வெல்த் போட்டி நடந்தது. இப்போட்டிக்காக சுமார் ரூ. 70 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதில், மைதானம் கட்டுவது, பாலம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளில் "மெகா' ஊழல் நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இது குறித்து முன்னாள் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி   சங்லு தலைமையிலான கமிட்டி விசாரணை நடத்தும் என, பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார். இது தவிர, அமலாக்கப்பிரிவினர், டில்லி போலீஸ், சி.பி.ஐ., மற்றும் வருமான வரித்துறை ஆகியோரும் விசாரணையில் இறங்கி உள்ளனர்.

கூடுதல் தொகை: இதற்கிடையே தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையத்திடம் இருந்து, காமன்வெல்த் ஊழல் தொடர்பான அதிர்ச்சி தகவல்கள் பெறப்பட்டு உள்ளன. இதன்படி, போட்டிக்கான மைதானம் கட்டுதல் உள்ளிட்ட 11 பணிகளுக்கு மதிப்பீடு செய்யப்பட்ட தொகை ரூ. 1,435 கோடி. ஆனால், தொகையை உயர்த்தி 1,962 கோடி ரூபாய்க்கு "டெண்டர்' கொடுத்துள்ளனர். இதன் மூலம் 527 கோடி ரூபாய் மோசடி நடந்து உள்ளது. உதாரணமாக சிவாஜி ஸ்டேடிய பணிகளின் மதிப்பீடு 80 கோடி ரூபாய். இத்தொகையை இரண்டு மடங்காக உயர்த்தி 160 கோடி ரூபாய்க்கு "டெண்டர்' வழங்கியுள்ளனர். முகர்ஜி நீச்சல் காம்ப்ளக்ஸ் அமைப்பதற்கு 175 கோடி தான் மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் "டெண்டர்' 229 கோடி ரூபாய்க்கு அளிக்கப்பட்டுள்ளது. இப்படி 11 பணிகளில் அதிக தொகைக்கு "டெண்டர்' கொடுக்கப்பட்டுள்ளது.

ரூ. 200 கோடி "அபேஸ்': தவிர, 200 கோடி ரூபாய்க்கு கணக்குகள் எதுவும் இல்லை. இதனை ஒன்று அல்லது பல பேர் சேர்ந்து சுருட்டியிருக்கலாம் என லஞ்ச ஒழிப்பு ஆணையம் கருதுகிறது. சுரேஷ் கல்மாடி மீது 25 புகார்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. ஒருங்கிணைப்பு கமிட்டியின் இணை இயக்குனரும் கல்மாடியின் நெருங்கிய கூட்டாளியு மான ராஜ் குமார் சச்சேத்தி மீதும் புகார் உள்ளது. ஒட்டுமொத்தமாக 22 பணிகளில் நிதிமுறைகேடு நடந்துள்ளதாக, லஞ்ச ஒழிப்பு ஆணையம் தெரிவித்து உள்ளது.

ஆய்வு துவக்கம்: லஞ்ச ஒழிப்பு ஆணையம் தவிர,  தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியும் ஊழல் தொடர்பாக ஆய்வு செய்ய உள்ளார். காமன்வெல்த் விளையாட்டு கிராமம் கட்டுவதில் ஏற்பட்ட நிதி முறைகேடு குறித்து தனது விசாரணையை வரும் 28ம் தேதி துவக்குகிறார். இதன் அறிக்கை அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படும்.

முதல்வர் புகார்: இப்படி ஊழல் தொடர்பான விசாரணைகள் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க, மறுபக்கம் டில்லி முதல்வர் ஷீலா தீட்சித் மற்றும் சுரேஷ் கல்மாடி இடையே மோதல் வெடித்துள்ளது. இது குறித்து ஷீலா தீட்சித் கூறுகையில்,""கல்மாடி தலைமையிலான ஒருங்கிணப்பு கமிட்டி மீது தான் சந்தேகம் எழுந்துள்ளது. இதன் சார்பில் 1,620 கோடி ரூபாய்க்கு நடந்த பணிகளில் ஊழல் நடந்திருக்கலாம்,'' என்றார்

கல்மாடி பதிலடி: இதற்கு காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார் கல்மாடி. இது குறித்து அவர் கூறுகையில்,""ஷீலா தீட்சித்தின் கருத்து தேவையில்லாதது. மற்றவர் களை கைநீட்டி குற்றம்சாட்டுவதற்கு முன்பாக, தனது துறையில் நடந்துள்ள ஊழல் பற்றி ஆய்வு செய்யலாம். எங்களுக்கு ஒதுக்கப்பட்ட 1,620 கோடி தவிர, டில்லி அரசு செலவு செய்த 16 ஆயிரம் கோடி பற்றியும் விசாரிக்கப்படும். அப்போது உண்மை தெரிய வரும்.போட்டிகள் வெற்றிகரமாக நடக்க வேண்டும் என்பதற்காக தான் அமைதியாக இருந்தேன். இதனை பலவீனமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.  ஒருங்கிணைப்பு கமிட்டியை இனிமேலும் பலிகடா ஆக்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது,''என்றார்.

அத்வானி வரவேற்பு : காமன்வெல்த் போட்டி ஊழல் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டதை பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி வரவேற்றுள்ளார். இது குறித்து இணையதளத்தில் இவர் வெளியிட்டுள்ள செய்தியில்,""காமன்வெல்த் போட்டி முடிந்த கையோடு, ஊழல் பற்றி விசாரணைக்கு பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டது மனநிறைவு அளிக்கிறது. தவறு செய்தவர்கள் யாரும் தப்பி விடக் கூடாது,''என, தெரிவித்துள்ளார்.

ரகசிய சந்திப்பு : காமன்வெல்த் போட்டியை கண்காணிக்க அமைக்கப்பட்ட மத்திய அமைச்சர்கள் குழுவின் கூட்டம், இன்று ஜெய்பால் ரெட்டி தலைமையில் நடக்கிறது. இதற்கு முன்பாக நேற்று ஜெய்பால் ரெட்டியை, போட்டி ஒருங்கிணைப்பு கமிட்டி தலைவர் சுரேஷ் கல்மாடி ரகசியமாக சந்தித்தார். இவர்கள் என்ன பேசிக் கொண்டார்கள் என தெரிய வில்லை.

இது குறித்து ரெட்டி கூறுகையில், ""கல்மாடி என்னை சந்தித்தது உண்மை தான். "தசரா' பண்டிகை வாழ்த்து சொன்னார். அவ்வளவு தான்,''என்றார். ஏற்கனவே பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்., தலைவர் சோனியாவால் புறக் கணிக்கப்பட்ட, சுரேஷ் கல்மாடி திடீரென ரெட்டியை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
ராம் - சிங்கப்பூர்,சிங்கப்பூர்
2010-10-18 03:54:50 IST
காமன்வெல்த் போட்டி தொடங்குவதற்கு முன் மேற் கூரை இடிந்து விழுந்து உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி கல்மாடி மற்றும் முதல்வர் ஷீலா தீட்சித் செய்த ஊழல் அம்பலமானது என்னவோ உண்மைதான். தற்பொழுது இந்தியா அதிக தங்கத்தை குவித்து இரண்டாம் இடத்தை பிடித்ததால், நடந்த ஊழலை மக்கள் மறந்து சகஜ நிலைக்கு மாறி விட்டனர் என்பதையும் மறுப்பதற்கு இல்லை.யார் யார் எவ்வளவு ஊழல் செய்தார்கள், பல கோடி ரூபாய் எங்கே போனது என்பதை ஆராய்ந்து ஒரு தொகுப்பாக நம்ம ஊரு ஹலோ FM மில் நேற்று இரவு பேசினார்கள்( இந்திய நேரப்படி 8 மணிக்கு) யாராவது கேட்டு இருந்தால் புரிந்து இருக்கும். தினமலர் கூட இந்த காமன்வெல்த் ஊழல் அவலங்களை சிறப்பு நிருபர் மூலம் வெளிச்சம் போட்டு காட்டினால் நன்றாக இருக்கும். எனது எதிர் பார்ப்பும் அதுவே...எனது ஆசையை நிறைவேற்றுவீர்களா???...
சாரு - London,இந்தியா
2010-10-18 03:27:53 IST
குளம்பின குட்டை....
ப.சேகர் - சிங்கப்பூர்,சிங்கப்பூர்
2010-10-18 00:56:35 IST
ஊழல் ஊழல் காங்கிரஸ் சர்க்காரே ஊழல் தான். பல்லாயிரம் கோடிகள் இப்போ சர்வ சாதாரணமாய் ஆகிப்போனது. ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடங்கி இப்போது வரை எத்துனை ஆயிரம் கோடிகள் ஊழலை வருவதை பார்த்தால் ஒவ்வோர் காங்கிரஸ் நபரும் பல கோடிகளுக்கு அதிபதியாய் இருப்பார்கள் போல் உள்ளது. இந்த பிரதமரை போன்ற "தகுதி இல்லாத" பிரதமரை இனி காணவே முடியாது. இவருக்கு என்னதான் வேலையோ..எந்த ஆண்டவர் வந்தாலும் நம் நாட்டை காப்பாற்றவே முடியாது. காங்கிரஸ் மத்தியில் தூக்கி எறியப்படவேண்டியது காலத்தின் கட்டாயம். எதிர் கட்சியினரும் இது போன்ற முக்கிய ஊழல் நிகழ்வுகளை மக்களுக்கு எடுத்து சொல்வதிலே அவ்வளவாய் அக்கறை காட்டுவதில்லை. ஏன் என்று தெரியவில்லை..ஒருவேளை சரியான கமிஷன் கிடைக்குமோ என்னவோ..ஒரு வேலை சாப்பாட்டிற்கு வழியில்லாது ஐம்பது கோடிபேர் உள்ள நம் நாட்டில் பேசப்படுவதெல்லாம் பல்லாயிரம் கோடிகளில் ஊழல்..!! இந்தியாவில் மாதிரி ஒரு கொடுமை உலகிலே எங்குமே இருக்காது, இதே கொடுமதி ஊழல் நாயகர்களை மக்கள் மீண்டும் தேர்ந்தெடுப்பது ஏன் என்றும் புரியவில்லை..தலை சுற்றுகின்றது..!!!...
எ அய்யப்பன் - delhi,இந்தியா
2010-10-18 00:42:18 IST
வயதில் பெரியவர்கள்.இவ்ளவு கேவலமாக வேலை செய்திருக்க கூடாது.எந்த ப்ராஜெக்ட் செய்தலும் ஒரு finance controler இருப்பரே? அப்படி யாரும் இல்லையா ? எங்கே மன்மோகன் சிங்க் ஒளிந்து கொண்டுள்ளார? ஆறு வருடமாக ஒரு கேவலமான ஆட்சி ?...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக