செவ்வாய், 12 அக்டோபர், 2010

மனைவி குக்கர் அல்ல; அவளுக்கும் உணர்வு உண்டு'


பொங்கலூர் : ""உலகில் வணங்கத்தக்கது மூன்று. அவை, தாவரம், தொழிலாளர்கள், பெண்மை; இவற்றில் உயர்ந்தது பெண்மை. தனக்காக வாழாமல் பிறருக்காக வாழும் பெண்கள், சமுதாயத்தில் இரண்டாமிடத்தில் இருக்க காரணம் சமுதாயம் அல்ல; தத்துவம்,'' என அழகர் ராமானுஜம் பேசினார்.
பொங்கலூர், திருப்பூர் லயன்ஸ் கிளப் மற்றும் பொங்கலூர் மனவளக்கலை மன்றம் சார்பில், மனைவி நல வேட்பு தின விழா, கொடுவாயில் நடந்தது. மனவளக்கலை மன்ற தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். துணை தலைவர் நாச்சிமுத்து, திருப்பூர் டாலர்சிட்டி லயன்ஸ் கிளப் தலைவர் கந்தசாமி முன்னிலை வகித்தனர். லயன்ஸ் அறக்கட்டளை தலைவர் பழனி சிவக்குமார் வரவேற்றார்.

தஞ்சை பேரளம், வேதாத்திரி மகரிஷி அமைதி மற்றும் ஆன்மிக மேம்பாட்டு நிறுவனத்தின் நிறுவனர் அழகர் ராமானுஜம் பேசியதாவது:ஆன்மிகம் வருங்கால சமுதாயத்தை உருவாக்குகிறது; துயரம், பேரழிவு போன்ற காலங்களில், இணைப்பு பாலமாக செயல்படும் லயன்ஸ் கிளப், நிகழ்கால சமுதாயத்தை உருவாக்குகிறது. கணவன், மனைவி உறவு சமுதாயத்தில் மிகவும் நெருக்கமானது; புனிதமானது. இல்லற வாழ்வில் சில விரிசல்கள் வரலாம்; அன்பை பரிமாறிக் கொள்வது சிறந்த இல்லறம்; ஒருவர் குற்றம் செய்யும்போது, மற்றொருவர் மன்னித்து ஏற்பது தெய்வீகம். மனைவி மட்டும் தன் பக்கமிருந்தால், உலகமே எதிர்த்தாலும் ஒருவனால் ஜெயிக்க முடியும்.திருமண உறவில் இணைந்த குடும்பம், எக்காரணம் கொண்டும் பிரியக்கூடாது. தாயாகவும், தாரமாகவும், தமக்கையாகவும் வருவது பெண்கள். அவர்களை போற்ற வேண்டும்.

உலகில் வணங்கத் தக்கது மூன்று. அவை, தாவரம், தொழிலாளர்கள், பெண்மை; இவற்றில் உயர்ந்தது பெண்மை. தனக்காக வாழாமல் பிறருக்காக வாழும் பெண்கள், சமுதாயத்தில் இரண்டாமிடத்தில் இருக்க காரணம் சமுதாயம் அல்ல; தத்துவம்.அனைவரும் தாயை வணங்க வேண்டும்; தாரத்தை பாராட்ட வேண்டும். மனைவி என்பவள் குக்கர் அல்ல; அவளுக்கும் உணர்வு உண்டு; மதிப்பு கொடுக்க வேண்டும்; மதிப்பு கொடுக்காதபோது துன்பம் வருகிறது. வாழ்க்கை என்பது விட்டுக் கொடுப்பது; அறிவில் உயர்ந்தவர்கள் விட்டுக்கொடுக்கிறார்கள். பிறர் சுதந்திரத்தை பறிப்பது ஆணவம்; பிறருக்கு சுதந்திரம் கொடுப்பது அன்பு. எவ்வுயிரும் தன்னுயிரே; பரஸ்பர அன்பில் குடும்பம் மலர்கிறது. தாய் இல்லாதபோது மனைவி துணையிருக்கிறாள்; தாரத்தை இழந்தவர் அனாதையாகிறார். எதை கொடுத் தேனும் இல்லறத்தை காப்பாற்ற வேண்டும்.இவ்வாறு, அழகர் ராமானுஜம் பேசினார்.

சேவைத்திட்டங்களை துவக்கி வைத்து, திருப்பூர் எம்.எல்.ஏ., கோவிந்தசாமி பேசுகையில், ""உறவை, நட்பை, பண்பை கற்றுத்தரும் நிகழ்வாக மனைவி நல வேட்பு தின விழா கொண்டா டப்படுகிறது. மகரிஷியின் தத்துவம் காரல் மார்க்ஸ் தத்துவத்துடன் ஒத்துப்போகிறது. குறிக்கோள் ஒன்றே தான். அடையும் வழி வேறு வேறாக இருக்கிறது.""போரில்லா உலகத்தை இருவரும் வலியுறுத்தியுள்ளனர். புரட்சியின் மூலம் சமுதாய மாற்றத்தை உருவாக்குவதைவிட, மனமாற்றத்தின் மூலம் சமுதாய மாற்றத்தை உருவாக்க மகரிஷி முயன்றார். உலகில் ஏற்றத் தாழ்வற்ற சமுதாயம் உருவாக வேண்டும்,'' என்றார்.

லயன்ஸ் கூட்டு மாவட்ட செயலாளர் நந்தபாலன், மாவட்ட துணை கவர்னர் சஜிடேவிட், லயன்ஸ் கிளப் செயலாளர் வரதராஜ், பொருளாளர் கோபாலகிருஷ்னன், லயன்ஸ் கிளப் அறக் கட்டளை செயலாளர் பிரகாஷ், சத்தியமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

GB.ரிஸ்வான் - JEDDAH,சவுதி அரேபியா
2010-10-12 03:06:08 IST
வணக்கம் !! திரு அழகர் ராமானுஜம் பேசியது மிகவும் அருமையாக உள்ளது.. பெண் ஒரு ஜடப்பொருள் இல்லை..வெறுமே ஜடமாக பெண் இருந்தால் வாழ்கை செத்து போகும். பெண் விழித்து கொண்ட காலம் இது.மரியாதை குறைய கணவனின் மரியாதையை காணாமல் போகும் தாலி கட்டி மாடு போல பின்னே கூட்டி வரும் நிலை இனி இல்லை. ஆண் தனக்கு ஒரு அந்தஸ்த்து என்று நினைக்க துவங்கிய பெண், ஆண் ஒரு தேவை என நினைத்தால் குடும்பம் சிதறும் ஆணின் அளவுக்கு மிஞ்சின திமிரோ..ஆணவமோ..ஆளுமையோ வாழ்க்கைக்கு வசந்தம் தராது..பெண் ஆதரவு தேடும் தோழமை விரும்பும் ஒரு மென்மையான மனித பிறவி,வாழ ஆசை படுபவனக்கு பெண் (மனைவி) ஒரு தேவதை,பெண்ணுக்கு ஆண் (கணவன்) சுந்தரன்..மனைவியை உண்மையாய் காதலிக்க துவங்கிய மனசு பிறரையும் நேசிக்க துவங்கும்..நேசிபவனுக்கு தான் நேசம் புரியும்.. உலகில் உள்ள அனைத்து ஆண் பெண்களுக்கும்..இப்போதும் இனி வரும் காலங்களிலும் ஒருவரை ஒருவர் நேசிக்கும்,விட்டுகொடுக்கும் அன்பு காட்டும் தன்மை கொண்ட கணவர்கள் மனைவிகள் அமையட்டும்.வாழ்க வளமுடன்..அன்புடன்..நட்புடன்.....
கே.கைப்புள்ள - nj,இந்தியா
2010-10-12 01:34:28 IST
குக்கராச்சும் பரவாயில்ல, உள்ளே வெந்து வெந்து கொதிச்சு கொதிச்சு புஸ்... புஸ்... ன்னு பெருமூச்சு விட்டு சிக்னல் கொடுக்கும். ஓடி போய் அதோட வாய தொறந்து விட்டா புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.....ன்னு மொத்தம்மா எல்லாத்தியும் விட்டுட்டு அமைதி ஆய்டும். அப்புறம் தொறந்து பாத்தா உள்ளே அழகழகா வெள்ளையா தும்பை பூ மாறி சோறு சிரிக்கும். சந்தோசமா அள்ளி திங்கலாம். ஆனா பொண்டாட்டி அப்படியா.... உள்ளயே கொமஞ்சுகிட்டு இருக்கும், உள்ள என்ன இருக்குன்னும் புரிஞ்சுக்க முடியாது, புர்... புர்... ன்னு சவுண்ட் வரும், சரி இதோட வாயவும் தொறந்து விடும்வோம்ன்னு போய் கைய வெச்சோம், அவளோதான் நாறி புடும் நாறி. அடங்கிடும் ன்னு நெனச்சு வாய தொறந்து விட்டா அது டும்ன்னு வெடிச்சு மூஞ்சி மொகறைய எல்லாம் பேந்து, உள்ள தும்ப பூ மாறி வெள்ளையா சோறு சிரிக்காது, கருகருன்னு சேறுதான் இருக்கும், அப்புறம் ஊருதான் சிரிக்கும். அப்பப்பா சில புருசனுக சிக்கிட்டு படுற பாடு இருக்கே, அத பாத்தா பேசாம நாம கூட பாம்பேக்கு போய் ஆப்பரேசன் பண்ணி பொண்ணா மாறி ஒரு இழிச்சவாயன கட்டிக்கிட்டா என்ன? வாழ்க்கை இப்படி ஜாலியாவே போகுமேன்னு தோணும். அந்த பாடு படுத்துராளுகடா சாமி, இந்த விக்கிரமாதித்தன் தோள்ள ஏறுன வேதாளம் மாறி, எறக்கி வெக்கவும் முடியாம, தூக்கி சொமக்கவும் முடியாம. இதையெல்லாம் ஒரு பயலும் பேச மாட்டேங்கிரானுக பாரேன். பொம்பள பக்கமாவே பேசுறத ஒரு எழுதப்படாத விதியாவே வெச்சு இருக்கானுக. ஏன்னா ஆண் என்பவன் எப்பேர்பட்ட கஷ்டங்களையும் தாங்குறவன், வலியவன், ஆம்பள பொலம்புனா பொட்டை தனம் என்ற எண்ணம் வேரூன்றி போனதுனால. அவனுக்கும் எழுத்தில் சொல்லாபடாத, வார்த்தைகளில் வடிக்கபடாத மெல்லிய உணர்வுகள் உள்ளோடி கொண்டிருக்கிறது என்பதை ஏனோ இந்த சமுதாயம் ஒத்து கொள்ள மறுக்கிறது....
2010-10-12 00:18:52 IST
உண்மையிலேயே பெண்களை தொலைக்காட்சி பெட்டி போலவும், குக்கர் போலவும் நடத்தும் ஒரு குறிப்பிட்ட பிரிவினர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக