செவ்வாய், 12 அக்டோபர், 2010

தாய்லாந்தில்150 புலிகள் இயக்க சந்தேகநபர்கள் கைது

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் என்று சந்தேகிக்கப்படும் 150 பேர் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்று தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது. இவர்களின் உடைமையில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரனுடைய புகைப்படம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
தாய்லாந்து பொலிஸார் கடந்த ஞாயிற்றுக்கிழமை இத்தேடுதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டிருந்தார்கள். தாய்லாந்தில் உள்ள 17 இடங்களில் இத்தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
மூன்றாவது நாடு ஒன்றில் அரசியல் தஞ்சம் அடைகின்றமைக்காக 150 பேரும் காத்திருந்திருக்கின்றார்கள் என்றும் இவர்கள் உரிய ஆவணங்கள் அல்லது விசாக்கள் இல்லாமல் தங்கி இருந்திருக்கின்றார்கள் என்றும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளார்கள். இவர்கள் படகு ஒன்றின் மூலம் கனடா வர காத்திருந்திருக்கின்றார்கள் என்று பெயர் குறிப்பிட விரும்பாத பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக