செவ்வாய், 12 அக்டோபர், 2010

3 Idiots ரீமேக்கில் கதாநாயகியாக நடிக்கிறார் இலியானா.

ஷங்கர் இயக்கும் 3 இடியட்ஸ் ரீமேக்கில் கதாநாயகியாக நடிக்கிறார் இலியானா. ஆரம்பத்தில் இந்த வேடத்தில் தமன்னா நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், இலியானாவை சென்னைக்கு வரவழைத்துள்ளார் ஷங்கர்.

3 இடியட்ஸில் கரீனை கபூர் பாத்திரத்தில் இலியானா நடிப்பார் என்று கூறப்படுகிறது. இதற்காக தனது 4 மாத கால்ஷீட்டுகளை மொத்தமாக கொடுத்துள்ளாராம் இலியானா.

கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமான இலியானாவுக்கு, அது நல்ல அனுபவமாக அமையவில்லை. அப்போது தெலுங்குக்குப் போனவர்தான். அதன் பிறகு பல சந்தர்பப்பங்கள் வாய்த்தும் தமிழில் படங்கள் நடிப்பதை தள்ளிப் போட்டு வந்தார்.

இப்போது ஷங்கர் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார்.

இந்தப் படத்தில் இலியானாவுக்கு அப்பா வேடத்தில் நடிக்கிறார் சத்யராஜ்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக