வயாவிளான் மத்திய மகாவித்தியாலயத் தின் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாமல் அப் பாடசாலையின் கையளிப்பு நிகழ்வை பிரமாண்டமாக ஏற்பாடு செய்தது எதற்காக என ஜனாதிபதி மகிந்த ராஜபக் கேள்வி எழுப் பினார்.
வடக்கு மாகாண அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம் நேற்று வவுனியா ஜோசப் முகாமில் இடம்பெற்றது.அதன்போது வயாவிளான் மத்திய மகா வித்தியாலயத்தின் அபிவிருத்தி குறித்து கல்வி அமைச்சின் செயலாளரிடம் ஜனாதிபதி கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த செயலாளர், பாடசாலையின் அபிவிருத்திப் பணிகளுக்கென 6.5 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது எனப் பதிலளித்தார்.
இதனையடுத்து குறுக்கிட்ட ஜனாதிபதி, பாடசாலையை கையளிக்கும் நிகழ்வு பிரமாண்டமாக நடைபெற்றது. எனினும் அபிவிருத்திப் பணிகள் மேற் கொள்ளப்படவில்லை எனத் கூறுகிறீர்களே எனத் தெரிவித்து வயாவிளான் மத்திய மகா வித்தியாலயத்தை கையளிக்கும் நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களையும் காண்பித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக