கடந்த ஒரு மாத காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட 98 பேரை மாவட்ட மதுவரி திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளதாக மாவட்ட மதுவரி பொறுப்பதிகாரி எஸ்.தேவராஜன் தெரிவித்தார். |
கடந்த செப்டம்பர் மாதம் முழுவதும் மதுவரி அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் சிக்கியதாக அவர் மேலும் தெரிவித்தார். சட்ட விரோத சாராயம்,கள்ளு,பியர் ஆகியவற்றை விற்பனை செய்த 90 பேரும்,கசிப்பு விற்பனை செய்த 7 பேரும்,போலி சிகரட் விற்ற ஒருவருமா மொத்தம் 98 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார். இவர்களுள் பலர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளதாவும்,சிலர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வெல்லாவெளி, களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு, காத்தான்குடி, ஆரையம்பதி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் மதுவரி திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக