""அரசியல் நாகரிகம் தெரியாமல் மதுரை கூட்டத்தில் ஜெயலலிதா பேசியதற்கு எல்லாம் பதில் கூறப்போவதில்லை,'' என்று, மத்திய அமைச்சர் அழகிரி கூறினார்.
மதுரையில் இருந்து மாலை 5.30 மணியளவில் விமானம் மூலம் சென்னை வந்த மத்திய அமைச்சர் அழகிரி, விமான நிலையத்தில் அளித்த பேட்டி:"மதுரை உங்கள் ராஜ்ஜியமாக இருக்கிறது என்று ஜெயலலிதா பேசியுள்ளாரே' என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, "மதுரை அ.தி.மு.க., கூட்டத்தில் ஜெயலலிதா பேசியதற்கு நான் கருத்து கூற விரும்பவில்லை. அரசியல் நாகரிகம் தெரியாமல் அவர் உளறிக் கொட்டியதற்கு எல்லாம் பதில் கூறப்போவதில்லை. யாரோ தவறாக எழுதிக் கொடுத்ததை அவர் வாசித்துள்ளார்."ஒரு தலைவர் என்பவர், ஒரு விஷயத்தை என்ன, ஏது என்று விசாரித்த பின் தான் பேச வேண்டும். அவ்வாறு செய்யாமல், தவறாக எழுதிக் கொடுத்த ஒரு விஷயத்தை, இரண்டு மணி நேரம் நின்று பேசியுள்ளார். அவரை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது."ஆட்சிக்கு வந்தால் நாங்கள் இன்னென்ன திட்டங்களை எல்லாம் செயல்படுத்துவோம் என்று கூறுவது தான் வழக்கம். அதைவிட்டுவிட்டு, எங்களை நாடு கடத்துவோம் என்பது போன்ற விஷயங்களை ஜெயலலிதா பேசியுள்ளார்' என்றார்.
ராம் - சிங்கப்பூர்,சிங்கப்பூர்
2010-10-20 07:18:19 IST
ஹலோ usha(kovai) மற்றும் SUBHA - லொஸ்ANGELES அவர்களே எப்டிங்க உங்களால கொஞ்சம் கூட யோசிக்காம இந்த மாறி கருத்து சொல்ல முடியுது, பல பேரு முன்னாடி அதுவும் பொது மேடையில ஒரு பெண்ணை(என்னதான் எதிர் கட்சி தலைவரா இருந்தாலும்) இவ்ளோ அசிங்கமா விமர்சனம் பண்றாரு அவருக்கு நீங்க ரெண்டு பேரும் வக்காளத்தா? இந்த லட்சணத்துல அழகிரி முதல் அமைச்சரா வேற வரணுமா முடில உங்க கருத்த படிச்சதும் எனக்கு சிரிப்புதான் வருது, ஒரு எதிர் கட்சி தலைவர் சொல்ற குற்றச்சாட்டுக்கு அமைச்சரா இருக்குற அழகிரி கிட்ட நிருபர் கேட்கும் கேள்விக்கு முறையான பதில் சொல்றத விட்டு புட்டு இப்டி பொறுப்பு இல்லாம பதில் சொல்லாம போறது எந்த விதத்துல ஞாயம்?...
கிழவன் சேதுபதி - chennai,இந்தியா
2010-10-20 07:02:28 IST
இது தேர்தல் வாக்குறுதி பொதுக் கூட்டம் இல்லையே.? கண்டன ஆர்ப்பாட்டம் தானே . மேலும் பார்லிமெண்டில் தான் பதில் சொல்ல மாட்டீர்கள் என்றால் இங்குமா,?...
மணிமணி - ஹென்னியக்ரோடு,தாய்லாந்து
2010-10-20 07:00:14 IST
இன்னும் சொல்ல வேண்டியது எவ்வளவா இருக்கிறது, நேரம் இல்லை, தொண்டர்கள் சோர்ந்தது விட்டார்கள். உங்கள் கடமையை நீங்கள் செய்யுங்கள். போகும் போது கொண்டா போக போகிறோம். அவர் கிடக்கிறார். நாம் நமது வழியை பார்ப்போம்...
yuvaraj - bangalore,இந்தியா
2010-10-20 06:47:04 IST
விலைவாசி எல்லா மாநிலத்திலும் உள்ளது. அதென்ன தமிழ் நாட்டில தான் முளைத்த மாதிரி ஆடுகிறார்களே....
கே.ராஜசேகரன் - chennai,இந்தியா
2010-10-20 06:46:36 IST
ஜனநாயக முறையில் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லமாட்டேன் என்று சொல்வது தான் அரசியல் நாகரிகமோ?...
கார்த்திக் சடையப்பன் - மதுரை,இந்தியா
2010-10-20 06:41:41 IST
புரட்சி தலைவி தமிழில் பேசியது கூட தங்களின் சிற்றறிவுக்கு விளங்காமல் பதில் கூறமுடியாது என்று கூறினால் எப்படி.... பெண் சிங்கம் உங்கள் கோட்டையில் வந்து உருமிட்டு போனதற்கு தக்க பதிலாக தங்களின் கருத்தை பத்திரிகைகளின் வாயிலாக மக்கள் மன்றத்தில் எடுத்துவையுங்க... காச வாங்கி ஓட்டு போடுற கூட்டம் ஒரு பக்கமிருந்தாலும், யோசித்து ஓட்டு போடுற கூட்டமும் இருக்கில்ல.... அவங்க ஏடாகூடமா யோசிச்சு நாளுக்கு ரெண்டு பழுதில்லைன்னு மாத்தி குத்திடபோறாங்க..... மொத்தத்தில் பேச்சுமில்லை, செயலுமில்லை...சொக்கநாதா மதுரைக்கு ஏன் இந்த சோதனை......
R.ரூபக முருகதாஸ் - MALAKKA,மலேஷியா
2010-10-20 06:37:04 IST
ஆமாம் ... ஒரு பெண்மணியை பார்த்து அவளது கன்னித்தன்மையை பற்றி பொதுக் கூட்டத்தில் பேசிய இவர் ரொம்பவே நாகரிகம் தெரிஞ்சவர்தான் ....
Sureshkumar - Singapore,இந்தியா
2010-10-20 06:32:01 IST
அம்மா பேசிய வார்த்தை சரியானது.உண்மையை பேசினால் யாருக்குடா புடிக்குது....
rajan - coimbatore,இந்தியா
2010-10-20 06:23:24 IST
அழகிரி சொல்ல என்ன இருக்கு. அரசியல் நாகரீகம் பற்றி யார் பேசுவது . நீ மட்டும் கன்னித்தாய் என்று பேசுவது அரசியல் நாகரீகமா ?...
மணி.வி - சென்னை,இந்தியா
2010-10-20 06:13:07 IST
சொன்னவற்றை மட்டுமல்ல,சொல்லாதவற்றையும் நிறைவேற்றுவது திமுக அரசே!தா கிருட்டிணன் மற்றும் குடும்பப் பத்திரிக்கை ஊழியர்களுக்கு சொர்க்கத்தைக் காட்டுவோம் எனச்சொன்னோமா? செய்துதானே காட்டினோம்!இலங்கைத் தமிழர்களை அழிக்க உதவுவோம் என்று சொன்னோமா?தமிழக மீனவர்களைக் கொல்லும் இலங்கைப் படைக்கு ஆயுதம் வழங்கி இன்னும் 500பேரைக் கொல்ல உதவுவோம் எனச்சொன்னோமா?செய்துகாட்டினோம்.கிடைத்துக்கொண்டிருந்த கொஞ்சநஞ்ச காவிரி,பெரியார் நீரையும் வராமல் பார்த்துக்கொள்வோம் எனச்சொன்னோமா?400 கோடி தமிழ்நாடு கேபிள் கார்போரஷனை மூடி லாபம் பார்ப்போம் எனச்சொன்னோமா? யாருக்கு நீங்கள் ஓட்டுப் போட்டாலும்,அவர்களை மிரட்டி,பணம் கொடுத்து எங்கள் கட்சிக்கு வர வைப்போம் எனச்சொன்னோமா? ஊழலுக்காக வெளியேற்றப் பட்ட அமைச்சர் பூங்கோதையை மீண்டும் மந்திரியாக்கி அழகுபார்ப்போம் எனச்சொன்னோமா?கோவை குண்டுவெடிப்பு சூத்திரதாரி மதானியை விடுதலை செய்து பெங்களூரிலும் அவர் 'பணி' தொடர உதவுவோம் எனச்சொன்னோமா? செய்து காட்டினோமல்லவா?ஜெ.வை எதற்கெல்லாம் குறைகூறி ஆட்சியைப் பிடித்தோமோ, அதைவிடக் கேவலமாக ஆட்சி செய்ய எங்களால் மட்டுமே முடியும் எனக் காட்டிக்கொண்டிருக்கிறோம் இது போதாதா?முக குடும்பம் தவிர வேறு யாருக்கும் ஆளத்தகுதியே கிடையாது, தொழில் செய்யத் தகுதியே கிடையாது (விடமாட்டோம்) என நிரூபித்துக்கொண்டுதானே இருக்கிறோம்? கூடியவிரைவில் தமிழகமே,தமிழனே இருக்கமுடியாமல் செய்ய எங்களாலேயே முடியும்.இப்படிக்கு அஞ்சாநெஞ்சன்!...
மணி - சென்னை,இந்தியா
2010-10-20 06:09:14 IST
உங்கே கருத்துக்கூறியுள்ள அனைவருக்கும்..மாற்றுக் கருத்து இருந்தால் தானே பதில் சொல்லுவார் அழகிரி?,சற்று ஹார்லிக்ஸ் குடித்து தெம்பாக அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்குவார்! இவர் சொல்வீரரல்ல!'செயல்' வீரர் அவர் 'செயல்'பட ஆரம்பித்து விட்டால் நாடு தங்காது!...
விகடன் - சென்னை,இந்தியா
2010-10-20 05:49:59 IST
மதுரை கூட்டத்தால் திமுகவில் ஸ்டாலின் மவுசு கூடியிருக்கும்.மதுரையில் இவ்வளவு கூட்டம் சேர்ந்ததை பார்த்து தாத்தா நல்லா அழகிரியை வாங்கு வாங்கியருப்பார். அதான் மதுரையை விட்டு சென்னைக்கு அண்ணன் கிளம்பிட்டாரு....
கரிகால் சோழன் - சென்னை,இந்தியா
2010-10-20 05:45:52 IST
அழகிரியின் வார்த்தைகளில் அரசியல் முதிர்ச்சியும் நாகரிகமும் வெளிபடுகிறது. ஜே ஜெயலலிதா காந்தாரி அரசியல் அணுகுமுறையை விட்டுவிட்டு ஆக்கபூர்வ அரசியல் பாதையை தேர்வு செய்வது அவருடைய எதிர்கால அரசியலுக்கு மட்டுமல்ல அவரை நம்பும் எம் ஜி ஆர் தொண்டர்களுக்கும் நல்லது....
தமிழ் வெறியன் - Bangalore,இந்தியா
2010-10-20 05:42:22 IST
வரும் காலத்தில் தமிழக சட்ட சபையில் கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே இருப்பார்கள். தமிழக மக்களே உஷார்....
Raj - Singapore,இந்தியா
2010-10-20 05:40:52 IST
தமிழ் நாட்டில் அரசியல் நாகரீகம் தெரிந்தவர் அழகிரி ஒருவர்தான்.......
ஹென்றி ஆல்பர்ட் - singapore,இந்தியா
2010-10-20 05:37:26 IST
நீங்களே சொல்லுங்கள் இது சரிதானா?...
ர கிருஷ்ணன் - Singapore,சிங்கப்பூர்
2010-10-20 05:35:19 IST
வருஷம்-2011, பார்தால் 234 ADMK!!!! DMK- அல்வாதான்.., வாழ்க நம் தமிழகம், உயர்க நம் தமிழக மக்கள்!!!!...
நாதன் - பெங்களூர்,இந்தியா
2010-10-20 05:02:35 IST
மிக சரியான பதில் .... ஜெயலலிதா அரசியல் நாகரிகம் அறியாதவர் ...ஆட்சிக்கு வந்தால் நாங்கள் இன்னென்ன திட்டங்களை எல்லாம் செயல்படுத்துவோம் என்று கூறுவது தான் வழக்கம்.... மிக சரியான வார்த்தைகள்...
sathish - cbe,இந்தியா
2010-10-20 04:57:27 IST
ஆமா நீங்க மதுரையில் தான் இருந்தீங்களா???...
சக்தி வேல் - singapore,இந்தியா
2010-10-20 03:55:47 IST
அழகிரி அண்ணன் யாரு கேள்விக்குதான் பதில் சொல்லி இருக்காரு ? இப்ப மட்டும் பதில் சொல்ல போறாரு....
சு பா - madurai,யூ.எஸ்.ஏ
2010-10-20 03:37:02 IST
பாஸு, ஆட்சிக்கு வந்தால் நாங்கள் இன்னென்ன திட்டங்களை எல்லாம் செயல்படுத்துவோம் என்று கூறுவது தேர்தல் கூட்டத்தில். மதுரைல நடந்தது கண்டன போராட்டம். கண்டன போராட்டதில நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதை பண்ணுவோம் அதை பண்ணுவோம்னு யாரும் பேசமாட்டாங்க பாஸு... கண்டன கூட்டத்துக்கும் தேர்தல் கூடத்துக்கும் வித்தியாசம் இருக்குல்ல பாஸு....சரி லூஸ்ல விடுங்க பாஸு......
usha - kovai,இந்தியா
2010-10-20 03:35:19 IST
அடுத்த முதல்வர் ஆகிற தகுதி உங்களுக்கு மட்டும் தான் இருக்கு....
SUBHA - லொஸ்ANGELES,இந்தியா
2010-10-20 02:59:25 IST
தமிழ் நாட்டில் அரசியல் நாகரீகம் தெரிந்தவர் அழகிரி ஒருவர்தான்....
மாயா - ஆஸ்திரேலியா,இந்தியா
2010-10-20 02:42:00 IST
ஜெயலலிதாவுக்கு பதில் சொல்ல வேண்டாம், மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும்....
தமிழ்மகன் - சென்னை,இந்தியா
2010-10-20 02:37:49 IST
பதில் இருந்தால் தானே அளிக்க முடியும், ஒன்றுக்கும் வாய் திறக்காதபடி, ஜெயலலிதா இப்படி போட்டு உடைத்தால் எப்படி பதில் கூற முடியும்,...
GB..ரிஸ்வான் - JEDDAH,சவுதி அரேபியா
2010-10-20 01:46:57 IST
நான் இந்த அழகிரியை பற்றி என்ன சொல்ல?அதான் எல்லோருக்கும் தெரியுமே,அவர்கள் கருத்து சொல்லட்டும் நான் படிக்கிறேன்....
கே.கைப்புள்ள - nj,இந்தியா
2010-10-20 01:18:33 IST
ஆமாமா... கரெக்ட்தான். தேர்தல் வரபோற நேரம், மக்களும் எதிர்கட்சியும், என்னதான் காட்டுகத்து கத்தினாலும் எதுக்கும் பதில் பேசாம பொத்திக்கிட்டு இருக்கிறதுதான் சரி. அவன் அவன் இங்க விலைவாசி ஏற்றம், கரண்ட் கட், தண்ணி இல்ல, பால் விலை ஏற்றம், பள்ளிகூட பீசு ஏற்றம், விவசாயம் பண்ண முடில, இருக்கிற நிலத்தஎல்லாம் உங்காலுக அடிமட்ட வெலைக்கு புடுங்கிக்கிறாங்க, ஊருக்குள்ள ஒரு தொழில் பண்ண முடில, எங்க பாத்தாலும் உங்காளுங்க தொல்ல, சட்டம் ஒழுங்கு ஒழுகுது. பிரச்சினை, பிரச்சினை, பிரச்சினை... எங்க பாத்தாலும் பிரச்சினை. மக்கள் அப்படியே உளைல போட்ட அரிசிமாரி கொதிச்சுகிட்டு இருக்காங்க. இப்போ எதாச்சும் வாய தொறந்தீங்க, மொத்தமா இருக்கிற ஓட்டு எல்லாம் அந்தம்மாவுக்கு போய்டும். பேசாம போயி, நலத்திட்டங்கள அறிவியுங்க, சில இலவச அறிவிப்புகள வெளியிடுங்க, அவனுக்கும் இவனுக்கு 10% 20% போனஸ் அறிவிப்பு போடுங்க இந்தமாறிஎல்லாம் செஞ்சு எப்படியோ குறுக்கு வழில மறுபடி ஆட்சிய புடிக்க ட்ரை பண்ணுங்க. ஏன்னா அதுதான நமக்கு கை வந்த கலை. பிரச்சாரத்துக்கு கூட போவாதீங்க. எதாச்சும் பண்ணி இருந்தா தான சொல்லுறதுக்கு....
Samuel - Madurai,இந்தியா
2010-10-20 01:10:39 IST
ஜெயலலிதா பேசிய எந்தக் கருத்துக்கு அண்ணன் இந்தப் பதில் கூறினாங்க? ஜெயலலிதாவின் பேச்சில் எதுவும் தவறிருப்பதாகத் தெரியவில்லையே!...
Amal - Castries,செயின்ட் லூசியா
2010-10-20 00:55:44 IST
சூரியனை பார்த்து நாய் குலைக்கிறது என்பதற்காக அதனை பெரிது படுத்த வேண்டியதில்லை....
கரப் - சென்னை,இந்தியா
2010-10-20 00:47:00 IST
ஆமாஞ்சாமி, அரசியல் நாகரீகத்தை திருச்சியில் நடந்த தி.மு.க மாநாட்டில் பேசியவர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்....
குமார் - அருஷ,இந்தியா
2010-10-20 00:39:59 IST
பதில் கூற விரும்பமில்லயா அல்லது .........?...
சுரேஷ் - சென்னை,இந்தியா
2010-10-20 00:38:52 IST
அழகிரி சார், சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்!...
ராம் - சிங்கப்பூர்,சிங்கப்பூர்
2010-10-20 00:38:41 IST
அழகிரி கரெக்டா சொன்னீங்க, தாத்தா கருணா சொன்ன மாறி ஆட்சிக்கு வந்தா இலவசமா முட்டை போடுவோம்,இலவசமா கோழி தீவனம் போடுவோம், முட்ட போடுற கோழிய இலவசமா குளிப்பாட்டி பராமரிச்சி தருவோம்,முடியாட்டி கோழிய கொன்னு "சிக்கன் 65" பண்ணி அதையும் இலவசமா தருவோம் னு அந்த அம்மா சொல்லாம போனது தப்புதான்...மதுரைக்கு வந்து உன் கண்ணு முன்னாடி இவ்ளோ பேர கூட்டி உண்மையான அஞ்சா நெஞ்சன் நான் தான் ன்னு சும்மா தில்லா கில்லி மாறி சொல்லி அடிக்குது. அதுக்கு உருப்படியா ஒரு பதில காணோம். அத விட்டு புட்டு அரசியல் நாகரீகம் அந்த அம்மாவுக்கு தெரியலன்னு சொல்றீங்க, நீங்க மட்டும் "கன்னி தாய்" னு கிண்டல் பண்ணலாம் அது மட்டும் சரியா ?...
Raja - doha,கத்தார்
2010-10-20 00:35:55 IST
எதற்கு தான் நீங்கள் பதில் கொடுத்தீர்கள்...
மு அமானுல்லா - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-20 00:22:20 IST
இப்பொழுது மட்டுமல்ல எப்பொழுதுமே ஜெ.வின் குற்றச்சாட்டுகளுக்கு உங்களிடம் இருந்து விதண்டாவாதம் தானே பதிலாக வருகிறது....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக