திங்கள், 18 அக்டோபர், 2010

பாக். எம்பிக்களில் 67 பேர் போலி பட்டதாரிகள்: 13 பேர் பதவி நீக்கம்

பாகிஸ்தான் எம்.பி.க்களில் 67 பேர் படிக்காமலேயே பட்டம் பெற்றதாகப் போலிச் சான்றிதழ்களை சமர்பித்துள்ளனர் என்று தகவல் வந்துள்ளது.

இதையடுத்து உயர் கல்வி கமிஷன் மொத்தமுள்ள 428 எம்.பி.-க்களின் கல்விச் சான்றிதழ்களை சோதனை செய்யவிருக்கிறது.

இதற்காக அது தேர்தல் ஆணையத்தை எம்.பி.-க்களின் சான்றிதழ்களை வாங்குமாறு கடிதம் எழுதியுள்ளது. அவ்வாறு வாங்கப்படும் சான்றிழ்கள் உண்மையானதா என்று சோதிக்கவிருக்கின்றனர். இந்தக் கடிதம் தேர்தல் ஆணையத்திற்கு உயர் கல்வி கமிஷனின் தலைவர் பரூக் லெகாரி லண்டனுக்குச் செல்வதற்கு ஒரு நாள் முன்பே கொடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே போலிச் சான்றிதழ்களை சமர்பித்த 13 பேர் பதவி நீக்கம் செய்யப்பட்டு இடைத் தேர்தலும் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. போலிச் சான்றிதழ் வைத்துள்ள 67 பேர்களில் இவர்கள் அடக்கம்
பதிவு செய்தவர்: இந்தியன்
பதிவு செய்தது: 18 Oct 2010 5:23 pm
எங்கள் நீட்டில் எந்த அரசியல்வாதிக்கும் கல்வியறிவு அவசியமில்லையே... தமிழ் நாட்டைப் பொறுத்தவரை சினிமாத் துறை தான் நுழைவுத் தேர்வு..

பதிவு செய்தவர்: ஸ்மிதா
பதிவு செய்தது: 18 Oct 2010 3:35 pm
இங்கே மட்டும் என்ன குறைச்சல் ராகுல் காந்தி தான் oxford University என பொய் சொல்ல வில்லையா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக