சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக கனேடியன் தமிழ்க் காங்கிரஸ் குரல் கொடுத்துள்ளமையானது உறுப்பினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் சரத்தை விடுவிக்குமாறு இவ்வாறு போராடுவதற்கு எந்தவகையான உத்தரவை அதன் உறுப்பினர்களிடமிருந்து தமிழ்க் காங்கிரஸ் பெற்றது என்பது இன்னமும் தெளிவில்லாத ஒன்றாகவே உள்ளது. இது டேவிட் பூபாலபிள்ளையினதும், கனேடியன் தமிழ்க் காங்கிரஸிடமிருந்து சம்பளம் பெறும் ஒரேயொரு பணியாளர் டான்ரன் துரைராஜாவினதும் புனைவுதிறனே இதுவென்றும் கூறப்படுகிறது.
காங்கிரசின் இந்த முடிவு குறித்து வன்கூவரின் நிதியியல் ஆலோசகர் ரோய் ரட்ணவேல் கேள்வியெழுப்பி கடிதம் எழுதியுள்ளார். இவர் கனேடியன் தமிழ்க் காங்கிரசில் நிறைவேற்றுக்குழு உறுப்பினராகவும், உப தலைவராகவும் இருந்து வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இக்கடிதத்துக்கு பலநாட்களாக எதுவித பதில் கடிதத்தையும் அவர் பெறவில்லை எனக் கூறப்படுகிறது.
இதன் தலைவரான சிறிரங்கா எதுவித கட்டுப்பாட்டையோ அல்லது பதிலையோ கொண்டிருப்பதாகவும் தெரியவில்லை. சிலரோ கனடாவிலும் உலகிலுமுள்ள தமிழர்களைத் திகைப்புற வைத்த வெற்று வேட்டு என்று கூறுகின்றனர். இன அழிப்புக்கு எதிரான தமிழர்களின் பிரிட்டன் பேச்சாளரான ஜனனி ஜனநாயகம் இதுகுறித்துக் கூறும்போது, இந்தப் பேட்டியை இலங்கை மற்றும் இந்திய ஊடகங்கள் தமது முன்பக்கத் தலையங்கமாக பிரசுரித்தன என்று குறை கூறியுள்ளார்.
மேலும் டேவிட் பூபாலபிள்ளையும் கனேடியன் தமிழ்க் காங்கிரசும் தமது நிலைப்பாடு குறித்து ஒரு அறிக்கையை விடுவதற்கு மறுத்துவரும் நிலையில் தமிழர்கள் இலங்கையையும் இந்தியாவையும் எப்போதும் குற்றங்கூற முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக