திங்கள், 18 அக்டோபர், 2010

மும்பையில் அவசர சிகிச்சைப் பிரிவு நோயாளியை கற்பழித்த மருத்துவர்

மும்பை: நவி மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த நோயாளியை கற்பழித்தற்காக அம்மருத்துவமனையில் பணி புரிந்த 26 வயது மருத்தவரை போலீசார் கைது செய்தனர்.

வாஷியில் உள்ள லோட்டஸ் மருத்துவமனையில் மருத்துவராக பணி புரிந்தவர் விஷால் வானே. இவர் அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த திருமணமான 30 வயது பெண்ணை கடந்த சனிக்கிழமை அன்று கற்பழித்துள்ளார்.

நவி மும்பையில் உள்ள கன்சுலியைச் சேர்ந்த அந்தப் பெண்ணுக்கு சோர்வு மற்றும் மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் நிலைமை மோசமடைந்ததையடுத்து அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

அந்தப் பெண் கற்பழிக்கப்பட்டபோது பாதி மயக்கத்தில் இருந்துள்ளார். அதனால் அவரால் கத்தவோ, மருத்துவரைத் தடுக்கவோ முடியவில்லை என்று இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரி ராஜ்குமார் சாபிகர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக