செவ்வாய், 14 செப்டம்பர், 2010

சேரன் இயக்கும் ‘அடுத்தத் தலைமுறை

சேரன் இயக்கும் ‘அடுத்தத் தலைமுறை’பொக்கிஷம் படத்திற்கு பிறகு, யுத்தம் செய், முரண் படங்களில் நடிப்பதில் மும்முரமாகிவிட்ட சேரன்;அடுத்து ஒரு படத்தை முழுக்க முழுக்க புதுமுகங்களே வைத்து இயக்கவுள்ளாராம்.சேரன் தற்போது நடித்து வரும் படம் “முரண்”. இதன் படப்பிடிப்பு கடந்த வரம்தான் தொடங்கப்பட்டது. மிஷ்கினின்உதவியாளர் ராஜன் மாதவ் இயக்கும் இப்படத்தை சேரனே தனது டிரீம் தியேட்டர்ஸ் நிறுவத்தில் தயாரித்தும் வருகிறார்.பரத் நடிப்பில் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கிய படம் ‘அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது’. இந்தப் படத்தை&ட்ரீம் தியேட்டர்ஸ் நிறுவனம்தான் தயாரித்தது. இதன் படுதோல்வியைத் தொடர்ந்து படம் தயாரிப்பதில் ஈடுபடாமல் இருந்தசேரன் மீண்டும் இந்தப் படத்தை தயாரிக்க நினைத்ததுக்கும் முக்கியக்காரணம் இருக்குதாம்.இந்தப் படத்தில் அவரும் நடித்தாலும், படத்தின் இயக்குனர் ராஜன் மாதவ்வின் திறமை மீதான நம்பிக்கையால்தான் இந்தப்படத்தை அவரே இயக்குகிறாராம்.மிஷ்கின் இயக்கத்தில் சேரன் நடித்துவரும் “யுத்தம் செய்” படம் விரைவில் முடியும் நிலையில் உள்ளது.மஇந்நிலையில்தான் ராஜன் மாதவ் சொன்ன&ுரண்’ படத்தின் கதை பிடித்துப் போனதால், இதில் நடிப்பதோடு, படத்தையும் தானேஇரண்டு நாயகர்கள் கதையான முரண் படத்தில் பிரசன்னாவும் நடிக்கிறார். யுத்தம் செய் படத்திலும் இருவரும்தான் ஹீரோக்கள். கனகவேல் காக்க படத்தின் நாயகி ஹரிப்ரியா மற்றும் சரோஜா படத்தில் நடித்த நிகிதா ஆகியோர் நாயகிகள்.இயக்குனர் ராஜன் மாதவ் பிரபல மலையாள இசையமைப்பாளர் ரவீந்திரனின் மகன்.இவரின் சகோதரரான சஞ்சன் மாதவ்இப்படத்திற்கு இசை.யுத்தம் செய்’படத்தில் சி.பி.ஐ அதிகாரியாக சேரன் நடித்ததால் அதற்கேற்ற மாதிரி உடல் எடையை குறைத்து மிகவும்&ஒல்லியாகியிருந்தார். ஆனால் அந்த உடல் அமைப்பு முரண் படத்திற்கு பொருத்தமின்றி முரண் பட்டுபோனதாம். இதனால்தற்போது கண்டதையும் தின்று உடல் எடையைக் கூட்ட ரொம்பத்தான் கஷ்டப்படுறாராம்.(ஹீரோவாக நடிக்கனும்ஆசைப்பட்டா மெனக்கெடத்தானே வேணும்.) முரண் படம் முடிவதற்கும் முன்பே கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிப்பில் சேரன் இயக்கவிருக்கும் படம் “அடுத்த தலைமுறை”. இதில் முழுக்க முழுக்க புதுமுகங்களே நடிக்கவிருகின்றனர்.(அடுத்தத் தலைமுறை நடிகர்கள் என்று சொல்லுங்க..இந்தப் படத்திற்கான கதை விவாதங்கள் நடந்து வருகின்றன. இன்னும் ஓரிரு மாதங்களில் இந்தப் படம் தொடங்குவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என சேரன் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக