செவ்வாய், 14 செப்டம்பர், 2010

வெனிசுலா: 47 பேருடன் விமானம் எரிந்து விழுந்தது

வெனிசுலா நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள புர்டோ ஓர்தாஸ் நகரில் இருந்து மார்கரிதா தீவுக்கு, அந்த நாட்டின் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று இன்று காலை புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் அந்த விமானம், அருகே உள்ள ஒரு இரும்பு ஆலை மீது விழுந்து தீப்படித்தது.
அந்த விமானத்தில் விமான ஊழியர்கள் 4 பேர் உள்பட மொத்தம் 47 பேர் இருந்தனர். அவர்கள் கதி என்ன? என்பது தெரிய வில்லை.

இந்த விபத்து பற்றி வெனிசுலா நாட்டின் விமான போக்கு வரத்து மந்திரி பிரசான்சிஸ்கோ, இந்த விபத்தில் சிலர் உயிர் இழந்து உள்ளனர். பலர் காயம் அடைந்து உள்ளனர். மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து இருக்கிறார்கள் என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக