புதன், 15 செப்டம்பர், 2010

அண்ணா நூலகம் யுனெஸ்கோவின் உலக டிஜிட்டல் நூலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

அண்ணா நூற்றாண்டு நூலகத்தை கலைஞர் திறந்து வைத்தார்

சென்னை கோட்டூர்புரத்தில் சர்வதேச அளவில் அண்ணா நூற்றாண்டு நூலகம் அமைக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்தார். இதையடுத்து, 180 கோடியில் அண்ணா நூற்றாண்டு நூலகம் அமைக்கும் பணி கடந்த ஆண்டு தொடங்கியது. முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டி பணிகளை விரைவுபடுத்தினார்
 
இந்த நூலகத்தில் இடம்பெற உள்ள ஓலைச்சுவடிகள், அரிய நூல்கள், கையெழுத்துப் பிரதிகள், வரைபடங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு யுனெஸ்கோவின் உலக டிஜிட்டல் நூலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த டிஜிட்டல் நூலகத்தில், தேசிய நூலகங்கள், ஆவணக்காப்பகங்கள், பாரம்பரிய நிறுவனங்கள் என 90க்கும் அதிகமான நிறுவனங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் இருந்து காஷ்மீரில் உள்ள அல்லமா இக்பால் நூலகம் மட்டுமே இதில் இணைந்துள்ளது. இரண்டாவதாக அண்ணா நூற்றாண்டு நூலகம் இதில் இணைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், உலகப் புகழ் பெற்ற பல நூலகங்களில் உள்ள தகவல்களை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பெற முடியும்.
முதலில் நான்கு லட்சம் புத்தகங்களுடன் தொடங்கப்பட உள்ள இந்த நூலகத்தில் அடுத்த மூன்று ஆண்டுகளில் அனைத்து தலைப்புகளிலும் 12 லட்சம் புத்தகங்கள் இடம்பெறும். நூலக திறப்பு விழா கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெற்று வருகிறது.
முதல்வர் கருணாநிதி, அண்ணா நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்தார்.
 நிதி அமைச்சர் அன்பழகன், அமைச்சர் தங்கம் தென்னரசு,தலைமை செயலாளர் மாலதி, மத்திய, மாநில அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கலந்து கொண்டுள்ளனர். அண்ணா நூற்றாண்டு நூலக திறப்பை முன்னிட்டு கோட்டூர்புரம் பகுதியே விழாக்கோலம் பூண்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக