புதன், 15 செப்டம்பர், 2010

மரியாதை கிடைக்காத கட்சியுடன் கூட்டணி தேவையில்லை-ராகுல் காந்தி

மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு உரிய மரியாதை, கெளரவம் தராத கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

திரினமூல் காங்கிரஸைத்தான் இவ்வாறு மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார் ராகுல். ஆனால் இக்கட்சியின் உதவியுடன் தான் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மேற்கு வங்க மாநிலம் பஷீராத் நகரில் அவர் பேசுகையில், மரியாதைக் குறைவான கூட்டணி என்பது கிடையவே கிடையாது. ஒரு கூட்டணி என்றால் அதில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு மரியாதையும், கெளரவமும் கிடைக்க வேண்டும். மேற்கு வங்கத் தேர்தலில் மரியாதை, கெளரவம் இல்லாத கூட்டணி அவசியம் இல்லை.

இருப்பினும் மேற்கு வங்கத் தேர்தலில் சிபிஎம்மைத் தோற்கடிக்க கூட்டணி ஏற்பட வேண்டியது அவசியம் என்பதை நாம் மறுக்க முடியாது. சிபிஎம்மை நாம் தோற்கடித்தாக வேண்டும் என்றார் ராகுல்
பதிவு செய்தவர்: செம்மொளியான்
பதிவு செய்தது: 15 Sep 2010 7:20 pm
இவனுக்கெல்லாம் ஒரு மரியாதை! ம்..... இப்படிப்பட்ட தடு பொறுதிகாறன் கையில் அணு ஆயுதம் உள்ள நாடு கிடைத்தால் என்னாகும்.? பொறுப்புவாய்ந்த எத்தனையோ இந்தியர் இருக்கும் போது ஏன் இந்த விசா பரீட்ச்சை ???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக