புதன், 15 செப்டம்பர், 2010

சோனியா அகர்வால்-சிம்பு படத்தில் மறுபிரவேசம்

செல்வராகவனிடமிருந்து விவாகரத்து பெற்ற சோனியா அகர்வால் மீண்டும் முழுவீச்சில் நடிக்க வந்துள்ளார்.

இந்த இரண்டாவது ரவுண்டில் அவர் ஒப்பந்தமாகியிருக்கும் முதல் தமிழ்ப் படம் வானம்.

தெலுங்கில் பெரும் வெற்றி கண்ட வேதம் படத்தின் தமிழ் ரீமேக் இது. க்ருஷ் இயக்கும் இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ் மனைவியாக நடிக்கிறார் சோனியா.

இந்தப் படத்தின் ஹீரோ சிம்பு என்றாலும், பரத் இன்னொரு ஹீரோவாக நடிக்கிறார். இவர்களுக்கு இணையான பாத்திரத்தில் பிரகாஷ் ராஜ் நடிக்கிறார். சோனியா அகர்வாலைத் தவிர மேலும் இரு ஹீரோயின்கள் இந்தப் படத்தில் உள்ளனர். அவர்கள்: அனுஷ்கா மற்றும் சினேகா உல்லால்.

இந்தப் புதிய வாய்ப்பு குறித்து சோனியா அகர்வால் கூறுகையில், "வானம் படத்தின் மூலமான வேதம் படத்தை நான் இரு முறை பார்த்து ரசித்தேன். இதில் எனக்கு ஹீரோயின் பாத்திரம் என்று சொல்ல முடியாது. ஆனால் மீண்டும் சினிமாவில் நுழைந்துள்ள எனக்கு மறக்க முடியாத படமாக இருக்கும் என நம்புகிறேன்.

உண்மையில் தெலுங்கில் இந்தப் படம் தயாரிக்கப்பட்ட போது என்னை முக்கிய வேடத்தில் நடிக்க அணுகினார் இயக்குநர் க்ருஷ். எனது தனிப்பட்ட பிரச்சினைகளால் அப்போது நடிக்கவில்லை..." என்றார்.

சோனியா அகர்வால் நடித்த கடைசி படம் திருட்டுப் பயலே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக