புதன், 15 செப்டம்பர், 2010

இந்தியாவை உதாசீனம் செய்தவர்கள்,எமக்கு உதவ முன்வந்த சந்தர்ப்பத்தில்

தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க இன்று ஐக்கியமே முக்கியம்
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆதரவு தளமாக விளங்கிய சுன்னாகம் கல்லாகட்டுவன் கிராம மக்களை இன்று (14.092010) தோழர் வரதராஜப்பெருமாள் சந்தித்து கலந்துரையாடினார். மலர்மாலை அணிவித்து மக்கள் அவரை வரவேற்றனர். ஊர் பிரமுகர்கள், பெரியோர்கள், பெண்கள், இளைஞர் யுவதிகள் என பலரும் இதன்போது சமூகமளித்திருந்தனர். அவர்கள் மத்தியில உரையாற்றிய தோழர் வரதராஜபெருமாள் அவர்கள் தமிழ் கட்சிகளிடையே ஐக்கியத்தின் அவசியம் குறித்து எடுத்துரைத்தார். தமிழ் மக்கள் அனுபவித்த, அனுவிக்கின்ற துன்பங்கள், துயரங்களுக்கு பரிகாரம் காணவும், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கவும் இது அவசியம் எனவும் வலியுறுத்தினார். கடந்த காலங்களில் ஐக்கியத்தை ஏற்படுத்த ஈபிஆர்எல்எவ் முன்முயற்சி எடுத்து செயற்படுத்தி காட்டிய காலகட்டங்களையும் நினைவுபடுத்தினார்.
இந்தியா எமக்கு உதவ முன்வந்த சந்தர்ப்பத்தில் இந்தியாவை உதாசீனம் செய்தவர்கள் இப்போது இந்தியா உதவிக்கு வரவில்லை என அங்கலாய்க்கிறார்கள். 50 களிலிருந்து வீரவசனங்களை பேசிவந்த தமிழ் தலைவர்கள், தமிழ் மக்களுக்க எதையும் பெற்றுத்தரவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மக்களின் பிரதிநிதிகள் என்ற அங்கீகாரம் நாம் எமது அரசியல் நடவடிக்கைகளை காத்திரமாக முன்னெடுக்கவும், மக்களின் தேவைகளை உரிமையோடு கோரிப்பெறவும், மக்களின் கஷ்டங்களுக்கு கைகொடுப்பதற்கும் அவசியம் என தெரிவித்த அவர் இந்த கிராமத்திலும், யாழ் மாவட்டமெங்கும் பத்மநாபா ஈபிஆர்எல்எவ் கட்சியை பலம்மிக்கதாக்க மீண்டும் எங்களுடன் நீங்கள் அனைவரும் கைகோர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக