புதன், 15 செப்டம்பர், 2010

காஷ்மீர: வன்முறையை கைவிடுங்கள் : அனைத்து கட்சி கூட்டத்தில் பிரதமர்

புதுடில்லி :"காஷ்மீரில் ஆயுதப் படை சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்யும் விவகாரம் குறித்து ஆலோசிக்க பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. உள்துறை அமைச்சர் சிதம்பரம், பாதுகாப்பு துறை அமைச்சர் அந்தோணி, நிதிஅமைச்சர் பிரணாப், காங்கிரஸ் தலைவர் சோனியா கலந்து கொண்டனர். ராணுவ சிறப்பு அதிகார சட்டத்தை திரும்பப்பெறுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டம் பிரதமர் இல்லத்தில் நடைபெற்றது. பா.ஜ., சார்பில் அத்வானி, காட்காரி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். தேசிய மாநாட்டுக் கட்சி சார்பில் அக்கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா தலைமையிலான குழுவினர் பங்கேற்றனர். கூட்டத்தில் ராணுவ சிறப்பு அதிகார சட்டத்தை திரும்பப்பெறுவது தொடர்பாக அனைத்து கட்சிகள் மத்தியில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.

பரூக் அப்துல்லா பேட்டி : இதனிடையே  மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா கூறுகையில், முதல்வர் ஓமர் அப்துல்லாவின் செயல்பாடுகளை பிரதமர் பாராட்டியுள்ளதாகவும்,  அரசு இயந்திரம் முடங்கவில்லை என்றும், கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஏமாற்றம் அடையவில்லை என்றும் கூறினார்.

இதனிடையே மெக்பூபா முக்தி கூறுகையில், மாநிலத்தில் நிபந்தனையின்றி  பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறினார். காஷ்மீர் மாநிலம் ஜெயில் போன்று மாற்றப்பட்டுள்ளதாகவும், பேச்சுவார்த்தைக்க எவரும் நிபந்தனை விதிக்க கூடாது என்றும் கூறியுள்ளார்.

சிதம்பரம் பேட்டி : மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேசுகையி்ல், அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு  காஷ்மீர் மாநில மக்களின் உண்ர்வுகளை மதிக்கும் வகையில் தீர்வு காணப்படும் என்று கூறினார்.

"காஷ்மீரில் ஆயுதப் படை சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்வது குறித்த விவகாரத்தில், இன்று நடக்கவுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பின், இறுதி முடிவு எடுக்கப்படும். இதில் காலதாமதம் எதுவும் ஏற்படாது. காஷ்மீரில் நிலைமை மோசமாகியுள்ளது என்பதை அரசு உணர்ந்துள்ளது' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காஷ்மீரில் கடந்த மூன்று மாதங்களாகவே வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் அப்பாவி மக்கள் உயிரிழப்பதாக கூறி, தினமும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

பாதுகாப்பு படையினர் மீது, போராட்டக்காரர்கள் கல்வீச்சில் ஈடுபடுகின்றனர். பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்துகின்றனர்.இதனால், கடந்த மூன்று மாதங்களாக காஷ்மீரின் பெரும்பாலான இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, புனித நூலான குர் ஆன், அமெரிக்காவில் அவமதிக்கப்பட்டதாக காஷ்மீரில் நேற்று வதந்தி பரவியது.இதையடுத்து, பாரமுல்லா, பாத்கம் ஆகிய இடங்களின் வன்முறை வெடித்தது. அரசு அலுவலகங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த வன்முறைகளில் 17 பேர் பலியாயினர். தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவி வருகிறது. நேற்று ஊரடங்கு முழு அளவில் அமலானது.காஷ்மீரில் நிலைமை மோசமாகி வருவதை உணர்ந்த மத்திய அரசு, நேற்று முன்தினம் அவசர ஆலோசனை நடத்தியது. "பிரச்னைக்கு நம்பகமான, நீடித்து நிலைக்கக் கூடிய தீர்வு காண, பேச்சுவார்த்தையே உகந்தது' என, இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதற்கிடையே, இந்த பிரச்னை குறித்து ராணுவ அமைச்சர் அந்தோணி, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:காஷ்மீரில் நிலைமை மோசமாகியுள்ளதை அரசு உணர்ந்துள்ளது. பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. காலதாமதத்துக்கு வேலை இல்லை. நாளை (இன்று) அனைத்துக் கட்சி கூட்டம் நடக்கவுள்ளது.ஒரு பிரச்னைக்கு தீர்வு காணும்போது, அனைத்து கட்சிகளின் ஆலோசனைகளை கேட்டு, அவர்களின் நம்பகத்தன்மையை பெற வேண்டும். இதற்காகவே, அனைத்து கட்சிக் கூட்டம் நடத்தப்படுகிறது.இதன்பின், காஷ்மீரில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்வதா, இல்லையா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். அனைத்து பிரச்னைகளையும் தீவிரமாக ஆலோசித்த பின்னரே, இதில் முடிவு எடுக்க முடியும். இந்த பிரச்னையை மிகவும் எச்சரிக்கையாக கையாள வேண்டும். நேற்று (நேற்று முன்தினம்) நடந்த வன்முறை, மிகவும் கவலை அளிக்கிறது. அனைத்து தரப்பினரும், தங்களின் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.இவ்வாறு அந்தோணி கூறினார்.

இதுகுறித்து மத்திய அமைச்சரவை செயலர் சந்திரசேகர் கூறுகையில், "காஷ்மீரில் ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை வாபஸ் பெறுவது தொடர்பான விஷயத்தில் அரசு நல்ல முடிவு எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சரவை தான் முடிவு செய்ய வேண்டும். நான் எந்த கருத்தும் கூற விரும்பவில்லை' என்றார்.

பாதுகாப்பு தேவை: காஷ்மீரில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை வாபஸ் பெறுவதாக கூறப்படுவது குறித்து, விமானப் படை தளபதி பி.வி.நாயக் கூறுகையில், "இந்த விவகாரத்தில் அரசு என்ன முடிவு எடுத்தாலும், அது சரியான முடிவாக இருக்க வேண்டும். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஒரு வீரர், தனது கடமையை திறமையுடன் செய்ய வேண்டும். இதற்கு அவருக்கு சட்டப்பூர்வமான பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டியது அவசியம்' என்றார்

ராஜினாமா: ஒமர் மறுப்பு: காஷ்மீர் முதல்வர் அப்துல்லா கூறுகையில்,"முதல்வர் பதவியை நான் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும். தற்போதுள்ள சூழ்நிலையில், முதல்வர் பதவியை நான் ராஜினாமா செய்தால், மாநிலத்தில் மேலும் பல பிரச்னைகள் ஏற்படும்' என்றார். அதே சமயம் காஷ்மீர் குறித்து மத்திய அரசு, "அங்கே நம்பிக்கைக் குறைவு ஏற்பட்டிருக்கிறது. அரசு நிர்வாகமும் சரியில்லை' என தெரிவித்ததில் ஒமர் மிகவும் நொந்துபோய் உள்ளார்.

மீடியாக்கள் தான் ராஜினாமா பற்றி தகவல்கள் கிளப்பி விட்டதாக தெரிவித்தார். காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்த பின், குறைந்த பட்சம் ஸ்ரீநகர் மற்றும் கந்தர்பால் நகர்களிலாவது ஆயுதப்படைப் பிரிவினர் விலக்கிக் கொள்ளப்படுவர் என்ற அவரது எதிர்பார்ப்பு பலன் தரவில்லை.டில்லியில் இன்று நடக்கும் சர்வ கட்சிக் கூட்டத்தில், மத்திய அமைச்சரும், ஒமரின் தந்தையுமான பரூக் அப்துல்லா பங்கேற்கிறார். அவர், காஷ்மீரில் தனது கட்சியும், காங்கிரசும் சேர்ந்து கூட்டணியாக உள்ள ஆட்சிக்கு பாதகமற்ற முறையில் செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், டில்லியில் காங்., தகவல் தொடர்பாளர் மணீஷ் திவாரி நிருபர்களிடம், "காஷ்மீரில் கூட்டணி குறித்து தேசிய மாநாட்டுக்கட்சிதான் முடிவெடுக்க வேண்டும்' என்று கடுமையாகக் கூறியிருப்பது, காஷ்மீர் நிலவரத்தை காங்கிரஸ் ஏற்கவில்லை என்று தெரிகிறது. இன்றைய நிலையில், காஷ்மீரில் அமைதி மற்றும் தேசிய கவுரவம் பாதிக்கப்படாமல் முடிவு தேவை என்று பா.ஜ., கருத்து தெரிவித்திருக்கிறது.

வன்முறை தொடர்வதால் காஷ்மீரில் ஊரடங்கு:காஷ்மீரில் நேற்றும் வன்முறை தொடர்ந்ததால், ஊரடங்கு உத்தரவு மேலும் சில பகுதிகளுக்கு விரிவு படுத்தப்பட்டுள்ளது. புனித நூலான குர் ஆன், அமெரிக்காவில் அவமதிக்கப்பட்டதாக நேற்று முன்தினம் காஷ்மீரில் வதந்தி பரவியது. இதையடுத்து அங்கு நடந்த வன்முறையில் 17 பேர் கொல்லப்பட்டனர்; 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்நிலையில், நேற்றும் சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. கிஷ்த்வார் நகரில் 2,000க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு, வீதிகளுக்கு வந்து போராட்டம் நடத்தினர். அமெரிக்க அரசுக்கு எதிரான கோஷங்களையும் அவர்கள் எழுப்பினர். திடீரென பாதுகாப்பு படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போலீசார், கூட்டத்தை கலைத்தனர்.

இதில், ஒரு போலீஸ்காரர் உட்பட பலர் காயமடைந்தனர். பதேர்வா, தோடா, பனிகால் உள்ளிட்ட இடங்களிலும் வன்முறை நடந்தது. அனந்தநாக் அருகே, போலீஸ் சோதனைச் சாவடிக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.இதையடுத்து, பத்காம், சோன், மிர்குண்ட், நார்கரா, ஷேக்போரா உள்ளிட்ட மேலும் பல இடங்களில் நேற்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், காஷ்மீரில் நேற்று செய்தித்தாள்கள் எதுவும் வெளியாகவில்லை. பத்திரிகை அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.
nandhu - kgm,இந்தியா
2010-09-15 16:07:22 IST
kasmirmela irukura akka rai tamilnattumela ean illai?....
வி.கே.லோகநாதன் - REDHILLS,இந்தியா
2010-09-15 15:37:30 IST
வன்முறையை கைவிடுங்கள் என்றால் எவனும் கைவிடமாட்டான்.இன்று நேற்று அல்ல. வன்முறையை ஒடுக்கு வதற்கு தனி தைரியம் வேண்டும்.சும்மா எல்லா கட்சி கூட்டம் என்று வீணடிக்க வேண்டாம்.காவல் துறை, முப்படை அதிகாரிகளைக் கொண்டு ஆலோசனை செய்ய வேண்டிய விஷயம்....
பாலன் - Theni,இந்தியா
2010-09-15 15:16:53 IST
ஐயா பிரதமரே, மயிலே மயிலே என்றால் இறகு போடாது. வன்முறையை வன்முறையால் தான் நசுக்க முடியும். பேச்சு வார்த்தை, பேசாத வார்த்தை எல்லாம் மனிதர்களிடம் செல்லும் வெறியர்களிடம் பருப்பு வேகாது....
மாணிக்கவேலு - paris,இந்தியா
2010-09-15 14:49:28 IST
அங்கு நடப்பது திட்டமிட்ட வன்முறை மாதிரி தெரிகிறது . குழந்தைகளும் பெண்களும் கூட தூண்டப் படுகிறார்கள் என்றால் பின்னணியை பார்த்துக்கொள்ளலாம். அரசு பின் வாங்கக்கூடாது ....
ராமசந்திரன் - சென்னை,இந்தியா
2010-09-15 14:48:48 IST
காஷ்மிரி முஸ்லிம்கள் தாங்கள் தனி நாடு என்று ஒரு பிரிவும், இஸ்லாமியர்கள் அதனால் பாகிஸ்தானியர் எனவும், இது அல்லாமல் ஒரு பிரிவும் இருப்பது சரி என்கிறனர். கலவரத்திற்கு நால்வர் போதும், ஒரு இறப்பு பின் அதை வைத்து கலவரம் என்று பொய் கொண்டே இருக்கிறது. பாகிஸ்தானியருக்கு 1971 பழிவாங்க காஷ்மீர் நல்ல விஷயம். இந்த சுழலில் என்னை பொறுத்தவரை ஒரு முடிவு என்பது சாத்யமில்லை....
அரபகத் தமிழ் மகன். - அல்அய்ன்,ஐக்கிய அரபு நாடுகள்
2010-09-15 14:44:55 IST
காஷ்மீரிகளின் உணர்வுகளுக்கு அரசாங்கம் என்றைக்குமே மதிப்பளிப்பதில்லை. உரிமைக்கு குரல் கொடுக்க வீதியில் அவர்கள் இறங்கினால் அவர்களை சுட்டுத் தள்ளி தீவிரவாதிகள் என்று கேவலப்படுத்தும் அரசின் நடவடிக்கை மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பெரும்பாலான காஷ்மீரிகள் காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்திருப்பதையே விரும்புகின்றனர். அரசின் இந் நடவடிக்கை தீவிரவாதிகளுக்கும் பிரிவினைவாதிகளுக்கும் தான் சாதகமாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை....
சாம் - சென்னை,இந்தியா
2010-09-15 12:25:19 IST
காஷ்மீர் பிரச்சனைக்கு சரியான தீர்வு கண்டால் நமது நாட்டில் ஒரு அமைத்து ஏற்படும் துணை ராணுவம் இருப்பது கஷ்மீர் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் அதை திரும்ப பெறுவது தான் இப்போது உள்ள காங்கிரஸ் அரசின் முடிவாக இருக்க வேண்டும். இந்த போராட்டத்தினால் உயிர் பலி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு போய் வருவது வேதனை அளிக்க கூடிய விஷயம் என்பதை பொது மக்கள் மறக்க வேண்டும் - சாம்...
கிஷோர் கே சுவாமி - பெங்களூர்,இந்தியா
2010-09-15 12:00:27 IST
In Kashmir, there is one soldier for every twenty people. There are 5,00,000 armed troops, 3,00,000 army men, 70,000 Rashtriya Rifle soldiers, 1,30,000 central police forces as against the total population of 1 crore. In the past 20 years, a generation of Kashmiris has grown with soldiers at every street corner “often even in their living rooms” (Sunday Times of India, 13th June, 2010). The grievance of the people is that instead of confining the role of the military and security forces to that of external defence and as against militants, it is regularly and continuously used for domestic repression; and as Professor Hameeda Nayeem says : “that has transformed the Indian state into a source of deep insecurity for the citizens – as instruments of the persistent violator of human rights and converted the Indian military into an illegitimate agent of repression. Both in turn seriously undermine the democratic credential of the state.” இ am of the view that all these acts of violence against innocent people are violations under the Geneva Convention, 1949, to which India is a party. The provisions of the Common Art.3 of the Four Conventions dealing with “armed conflicts not of an international character” occurring within a State require the parties to treat humanely all persons taking no part, or not being able to take active part in the hostilities….; and further the parties are prohibited from indulging in violence to life and person, in particular murder of all kinds, and cruel treatment and torture....
musthfa - saudiArabia,இந்தியா
2010-09-15 11:59:38 IST
இந்த நாடு அனைவருக்கும் சொந்தம் என்ற எண்ணம் வர வேண்டும். அப்போதுதான் நாட்டில் எந்த கலவரமும் ஏற்படாது. இது ஒரு மதசார்பற்ற நாடு. அனைத்து மதமும் அன்பைத்தான் சொல்கிறது...
S.Sasikumar - H.A.Vashafaru,மாலத்தீவு
2010-09-15 11:50:58 IST
To get votes congress is ready to sell Kashmir also. Useless government. What need is there to hold piece talks with the people who are backing the terrorists? If they start attacking the police , will the police keep quite? No need for all party meeting. better provide each and every trouble some people in kasmir with AK 47...
மணி - சென்னை,இந்தியா
2010-09-15 10:34:04 IST
நேரு ஐ நா சபையில் காஷ்மீர் 'தாவா'வுக்குட்பட்ட பகுதி(Desputed Area ) உளறியதால் வந்த வினை. இது!காஷ்மீர் பாரதத்துக்கே 100 % சொந்தம் என ஒப்புக்கொள்ளாத நாடுகளோடு உறவைத் துண்டிக்க வேண்டும். அவர்கள் உள்நாட்டுப் பிரச்னையில் அந்த அரசுக்கு எதிராக உள்ளவர்களை ஆதரிக்க வேண்டும். அப்போதுதான் புத்திவரும்! இந்தியா வல்லரசாக போவதைப் பொறுக்க முடியாமல், காஷ்மீர் இளைஞர்களைத் தூண்டும் பாகிஸ்தான், சவூதி, அமீரக அரசுகளை பாரத அரசு கண்டிக்கவேண்டும்! இல்லாவிட்டால் நமக்கேற்பட்ட கஷ்டம் அவர்களுக்கும் வரும் என எச்சரிக்க வேண்டும்!...
சு.இரவிக்குமார் - Vellore,இந்தியா
2010-09-15 10:19:47 IST
மத்திய அரசின் எப்போதும் உள்ள மெத்தன போக்கும் ஓமர் அப்துல்லாவின் இயலாமையே யாவற்றிக்கும் காரணம். சிறப்பு அதிகாரம் உள்ள போதே இந்த நியாமற்ற அந்நிய சக்திகளின் கைகூலிகளை அடக்க முடியவில்லை, இந்த சட்டத்தை விலக்கிகொண்டால் கட்டுபடுத்தப்பட்ட தீவிரவாதிகளின் செயல் மீண்டும் வளரும்.அது தான் அவர்களின் நோக்கம். நம்முடைய நேர்மையான இராணுவத்தின் செயல்பாடுகளால் தீவிரவாதிகளின் செயல்கள் எதையும் செய்ய முடியவில்லை. அதனால் கைகூலிகளை பணத்தினால் வாங்கி இளையவர்களை மதத்தின் போர்வையில் மற்றும் வேலையின்மையை பயன்படுத்தி அரசினை எதிர்த்து மட்டுமல்ல நம் நாட்டின் இறையாண்மையை எதிர்த்து போராட்டம் என்ற பெயரில் ரௌடிசத்தை தூண்டிவிடுகின்றனர்....
R.Krishnamurthy - Bangalore,இந்தியா
2010-09-15 07:13:21 IST
...தன்னை வாலிபர் என்று சொல்லிக்கொண்டு பல்வேறு இடங்களுக்கு சென்று வருங்கால பிரதமர் ஆக கனவு காணும் ,தயார் படுத்தப்படும் ராகுல் காஷ்மீர் சென்று அமைதிக்கு பாடுபட்டால் நல்லது . செய்வாரா ?...
ஆம் AADMI - Hyd,இந்தியா
2010-09-15 07:00:19 IST
கருத்து சொல்ல என்னங்க இருக்கு. வெட்டி பயங்க பேச்சு வீனா போச்சு. காஷ்மீர் இருக்ற வரைக்கும் பேச்சு வார்த்தை இந்தியா கை விடாது. அதே மாதிரி அவனுங்களும் வன்முறைய கை விட மாட்டாங்க ....
C Suresh - Charlotte,யூ.எஸ்.ஏ
2010-09-15 05:41:00 IST
There is no point in discussion with this Pakistan and ISI backed problem creators. Follow the Srilanka or Punjab pattern and everyone will live in peace. Other countries like USA takes every soldiers life seriously and give them enough power to fight. Here with so much control, police and security forces cannot do what they want and even 10-15 year old children are joining the protests without knowing what is happening. Terrorists and Separatists are spoiling the next generation and now serious and courageous move required by our Government. All polical parties should think about Nation and avoid thinking in vote lines while taking a decision....
இராமச்சந்திரன் - வெர்ஜினியா,யூ.எஸ்.ஏ
2010-09-15 05:17:18 IST
மக்களுக்கும் மண்டையில் மசாலா தான் உள்ளது...எவனோ ஒரு கிறுக்கன் ஏதோ ஒரு நாட்டுல செய்வேன்னு சொன்னதுக்கு நம்ம நாட்டு பொது சொத்தை அழிப்பது கடைந்தெடுத்த முட்டாள்தனம்....மத்திய அரசும் ஒரு தெளிவான கடுமையான நிலைப்பாட்டினை எடுக்கத்துணிவில்லாமல் கையைப்பிசைந்துகொண்டு நிற்பது அதை விடக்கேவலம். இப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் கலவரம் புரிபவர்களை பயந்து பயந்து பேச்சு வார்த்தைக்கு கூப்பிட்டுக்கொண்டே இருங்கள்.... ஒட்டு மொத்த இந்தியாவில் தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரனாகி விடுவான் விரைவில்...இந்த அணுகுமுறை மற்ற மாநில கலகக்காரர்களையும் உசுப்பேற்றக் கூடியது ..மத்திய அரசின் இந்த அணுகுமுறை மூலம் இந்திய ஒருமைப்பாடு பெரிய கேள்விக்குறியாகியுள்ளது. காங்கிரஸ் பதவியிறங்கினால்தான் இனி சாதாரண மக்கள் வன்முறை அச்சமின்றி வெளியில் நடமாட முடியும் போல உள்ளது... எங்களுக்கு தேவை நடவடிக்கை எடுக்கும் அரசு...பேச்சுவார்த்தை நடத்தி பணிந்து போகும் அரசல்ல.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக