புதன், 15 செப்டம்பர், 2010

ஆசிரியை ஒருவரால் தாக்கப்பட்டு மாணவன் வைத்தியசாலையில் அனுமதி!

ஹற்றன் தமிழ் பாடசாலை ஆசிரியையால் தாக்கப்பட்ட மாணவன் வைத்தியசாலையில் அனுமதி!

ஹற்றன் வெலிஓய மலைமகள் தமிழ் வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவன் ஆசிரியை ஒருவரால் தாக்கப்பட்டு கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹற்றன் மனித உரிமைகள் இல்லம் தெரிவிக்கிறது.அப்பாடசாலையில் தரம் 7 இல் கல்வி கற்கும் கிருஷ்ணன் நிரஞ்சன் என்ற மாணவனே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.

ஆசிரியை தாக்கியதில் மாணவனின் மணிக்கட்டு பாதிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் இல்லத்தின் இணைப்பாளர் தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பில் டிக்கோயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக