ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

பிரித்தானிய தொழிற்கட்சியின் புதிய தலைவராக எட் மிலிபான்ட் இன்று தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதற்காக நடைபெற்ற வாக்கெடுப்பில் தனது மூத்த சகோதரரும் முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான டேவிட் மிலிபான்ட்டை, எட் மிலிபான்ட் சொற்ப வித்தியாசத்தில்தோற்கடித்தார். கடந்த மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தொழிற்கட்சி தோல்வியுற்றதையடுத்து அக்கட்சியின் தலைவர் பதவியிலிருந்து முன்னாள் பிரதமர் கோர்டன் பிரவுண் ராஜினாமாச் செய்தார். அதையடுத்து புதிய தலைவர் பதவிக்கு எட் மிலிபான்ட, எட் போல்ஸ், டியேன் அபோட், டேவிட் மிலிபான்ட், அன்டி பர்ஹாம் ஆகிய 5 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.45 வயதான டேவிட் மிலிபான்ட் இப்போட்டியில் முன்னிலையில் இருந்தார். எனினும், இன்றிரவு நடைபெற்ற கட்சித் தேர்தலில் டேவிட் மிலிபான்ட்டை இரண்டாம் இடத்திற்குத் தள்ளிவிட்டு அவரின் இளைய சகோதரரும் முன்னாள் காலநிலை மாற்ற விவகார அமைச்சருமான எட் மிலிபான்ட் பிடித்தார்.இத்தேர்தலில் எட் மிலிபான்ட்டிற்கு 50.65 சதவீத வாக்குகளும் டேவிட் மிலிபான்டிற்கு 49.35 சதவீத வாக்குகளும் கிடைத்தன.டேவிட் மிலிபான்ட்டிற்கு அதிக எண்ணிக்கையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருந்த போதிலும் எட் மிலிபான்ட்டிற்கு தொழிற்சங்கங்கள், கீழ்மட்ட தொண்டர்களின் ஆதரவு கிடைத்ததன் காரணமாக எட் மிலிபான்ட் வெற்றி பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக