ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

வடக்கில் இந்தியாவின் 51000 வீடுகளின் நிர்மாணப் பணிகள் அக்டோபரில்

இந்தியாவின் நிதி உதவியுடன் வடக்கில் கட்டப்பட வுள்ள 51,000 வீடுகளின் நிர்மாணப் பணிகள் அக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்படும் என வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார். இது தொடர்பான விசேட கூட்டம் பத்தரமுல்லயிலுள்ள ஆளுநரின் அலுவலகத்தில் இலங்கையிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகளின் பங்களிப்புடன் நடைபெற்றதாகவும் அவர் தெரிவித்தார். அதற்கு முன்னர் மீளக்குடிய மர்த்தப்பட்ட மக்களுக்கு மழை காலத்துக்கு முன்னதாக வீட்டுக் கூரைகளை அமைத்துக் கொள்வதற்காகவும் மக்களை பாதுகாப்பாக வைத்திருக்கவும் கூடிய விதத்திலான ஆயத்தங் களை செய்து வருவதாக அவர் தெரித்தார். வட மாகாண ஆளுநர் அலுவலகம், ஜனாதிபதி செயலணி, மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் மழைகாலத்துக்கு முன்னதாக அவர்களுக்கான சகல வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என்றார். இந்திய அரசின் உதவியுடன் 1000 வீடுகள் முதற்கட்டமாக அமைக்கப்பட வேண்டிய இட ங்கள் குறித்தும் பயனாளிகளின் விபரம் குறித்தும் தயாரிக்கப் பட்ட அறிக்கைகள் இந்திய தூதுவரிடம் கையளிக்கப் பட்டுள்ளது. அடுத்ததாக 10,000 வீடுகளை திருத்த வேலைகள் செய்வது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆராயப்பட்டது. அத்துடன் வடக்கில் குறிப்பாக வன்னியை மையமாகக் கொண்டு 40,000 புதிய வீடுகள் கட்டப்படுவது குறித்தும் இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் ஆளுநருக் கிடையே பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக