திங்கள், 13 செப்டம்பர், 2010

புலிகளின் சர்வதேச கடற்படை வலையமைப்பின் பிரதானி,பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச கடற்படை வலையமைப்பின் பிரதானி என சந்தேகிக்கப்படும் முத்துசாமி இலங்கோவனுக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவி்த்துள்ளது. இதன்படி குறித்த சந்தேகநபரை எதிர்வரும் 17ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சந்தேகநபருக்கு எதிராக குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் வழங்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவரை பிணையில் விடுதலை செய்யுமாறு சந்தேகநபர் தொடர்பில் ஆஜரான சட்டத்தரணி கோரியுள்ளார். எனினும் நீதிமன்றம் பி்ணை வழங்க மறுப்புத் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக