திங்கள், 13 செப்டம்பர், 2010

ஏ9 பிரதான வீதி திறக்கப்பட்டது தொடக்கம் இதுவரை இலட்சம் சுற்றுலா பயணிகள்

ஏ9 பிரதான வீதி திறக்கப்பட்டது தொடக்கம் இதுவரை தென் பகுதியிலிருந்து வட பகுதியை நோக்கி சுமார் 20 இலட்சத்துக்கும் அதிகமான உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்தார். இதன் மூலம், உள்ளூர் உற்பத்திப் பொருட்கள் அதிக விற்பனை செய்யப்படுவதுடன் வட மாகாண தொழிலாளர்கள், வர்த்தகர்களுக்கு ஊக்குவிப்பாக காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வேலை நாட்களில் நாளொன்றுக்கு சுமார் ஆயிரம் தொடக்கம் 1500 பயணிகள் தங்கியிருப்பதாகவும் விடுமுறை தினங்களில் 20 ஆயிரம் வரை அதிகரிப்பதாகவும் ஆளுநர் சுட்டிக் காட்டினார். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் நன்மையைக் கருத்திற்கொண்டு எதிர் காலங்களில் மேலும் பல்வேறு திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் ஆளுநர் மேலும் தெரிவித்தார். 
www.paarvaikall.blogspot.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக