புனே குண்டு வெடிப்பில் கைதான தீவிரவாதி, கொழும்பு நகரில் பயிற்சி பெற்ற திடுக்கிடும் தகவல் விசாரணையில் தெரியவந்து உள்ளது.மராட்டிய மாநிலம் புனே நகரில் வெளிநாட்டினர் அதிகம் வந்து செல்லும் ஜெர்மன் பேக்கரியில் கடந்த பிப்ரவரி 13-ந் தேதி சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் 17 பேர் பலி ஆனார்கள். மேலும் 51 பேர் காயம் அடைந்தனர்.
இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வந்த மராட்டிய மாநில தீவிரவாத தடுப்பு போலீசார், புனே நகரில் மிர்சா ஹிமாயத் பெய்க் (வயது 29) என்ற தீவிரவாதியையும், நாசிக் நகரில் ஷேக் லால்பாபா முகமது உசேன் என்ற பிலால் (27) என்பவனையும் கைது செய்தனர். பெய்க் மராட்டிய மாநிலத்தில் லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்துக்கு தலைமை தாங்கி செயல்பட்டு வந்தவன் ஆவான். பிலால் அவனது கூட்டாளி. இவர்கள் இருவரும் மோசின், யாசின் ஆகிய 2 தீவிரவாதிகளுடன் சேர்ந்த இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியதாக தெரியவந்து உள்ளது.பெய்க் வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்து, துப்பாக்கி, ஒரு செல்போன் ஆகியவையும். நாசிக்கில் உள்ள பிலால் வீட்டில் நடத்திய சோதனையில் ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்து, வெடிகுண்டு தயாரிப்பு பொருட்கள், லஸ்கர்-இ-தொய்பா பிரசார புத்தகம், ரொக்க பணம் ஆகியவையும் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
கைதான இருவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையின் போது அவர்கள் லஸ்கர்-இ-தொய்பா இயக்கத்தினரிடம் தீவிரவாத பயிற்சி பெற்றது தெரிய வந்தது. பிலால் 3 முறை பாகிஸ்தானுக்குச் சென்று பயிற்சி பெற்று திரும்பியதாக விசாரணையில் தெரிய வந்தது.

கொழும்பு நகரில் பயிற்சி
பெய்க்கிடம் நடத்திய விசாரணையின் போது அவன் கொழும்பு நகரில் தீவிரவாத பயிற்சி பெற்ற திடுக்கிடும் தகவல் வெளியானது. கொழும்பு நகரில் எந்த இடத்தில் பயிற்சி முகாம் உள்ளது? அங்கு எத்தனை பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது? என்பது பற்றிய விவரங்களை அறிய பெய்க்கிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் கடந்த ஏப்ரல் 17-ந் தேதி கிரிக்கெட் போட்டி தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு குண்டு வெடித்ததில் 11 பேர் காயம் அடைந்தனர். இந்த குண்டு வெடிப்பிலும் பெய்க், பிலால் ஆகியோருக்கு தொடர்பு இருக்கலாம் என தீவிரவாத தடுப்பு போலீசார் சந்தேகிக்கிறார்கள். அது பற்றியும் அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
இலங்கை நடவடிக்கை
கொழும்பு நகரில் பயிற்சி பெற்றதாக தீவிரவாதி பெய்க் கூறி இருப்பதால் அதுபற்றி இந்திய ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி விவரங்களை தெரிவிக்குமாறு டெல்லியில் உள்ள தங்கள் தூதரகத்தை இலங்கை அரசு கேட்டுக் கொண்டு உள்ளது. இதுதொடர்பாக தங்கள் தூதரக அதிகாரிகள் இந்திய அதிகாரிகளுடன் பேசி வருவதாகவும் இலங்கை வெளியுறவு அமைச்சக வட்டாரங்களை மேற்கோள் காட்டி டெய்லி மிரர் என்ற பத்திரிகை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக