வெள்ளி, 10 செப்டம்பர், 2010

யாழ்ப்பாணத்தில் நாளை படையினர்- பொதுமக்கள் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி


பொதுமக்களுக்கும் படையினருக்கும் இடையிலான நல்லுறவை மேம்படுத்தும் நோக்குடன்  நடத்தப்படும்  படையினர் - பொதுமக்கள் நல்லுறவு கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி நாளை  வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.யாழ். மாவட்ட பாதுகாப்புப் படைகளின் தலைமையகமும் யாழ். மாவட்ட கிரிக்கெட் சங்கமும் இணைந்து இச்சுற்றுப்போட்டியை ஏற்பாடு செய்துள்ளன.இதில் அதிதிகளாக இலங்கை கிரிக்கெட் அணி  வீரர் சனத் ஜெயசூரிய, பிரிகேடியர் பிராங்ளின் ரொட்ரிகோ ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். இச்சுற்றுப்பேட்டியில் 22 அணிகள் பங்குபற்றின. இவற்றில் 18 அணிகள் யாழ் மாவட்ட விளையாட்டுக் கழகங்களைச் சேர்ந்தவையாகும். ஏனைய 4 அணிகள் இராணுவம் கடற்படை விமானப் படை மற்றும் பொலிஸ் ஆகியவற்றைச் சேர்ந்தவையாகும்.இறுதிப்போட்டிக்கு யாழ். ஜொனியன்ஸ் அணியும் விமானப்படை அணியும் தகுதி பெற்றுள்ளன. இத்தொடரில் சம்பியனாகும் அணிக்கு 30 ஆயிரம் ரூபாவும் இரண்டாவது அணிக்கு 20 ஆயிரம் ரூபாவும் மூன்றாவது அணிக்கு 10 ஆயிரம் ரூபாவும்  வழங்கப்படவுள்ளன. இச்சுற்றுப்போட்டி தொடர்பான பத்திரிகையாளர் மாநாடு நேற்று முற்பகல் 10 மணிக்கு யாழ். மாவட்ட பாதுகாப்புப் படையினரின் மக்கள் தொடர்பாடல் நிலையத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக