திங்கள், 13 செப்டம்பர், 2010

முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு கணணி தொழில்நுட்பப் பயிற்சி

வவுனியாவில் புனர்வாழ்வு பெற்று வரும் முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு கணனி பயிற்சிகளை வழங்கி அவர்களின் தொழில்நுட்ப அறிவையும் திறனையும் மேம்படுத்த புனர்வாழ்வு நாயகம் நடவடிக்கை எடுத்துள்ளார்.

பூந்தோட்டம் மற்றும் பம்பைமடு புனர்வாழ்வு நிலையங்களில் புனர்வாழ்வு பெற்றுவரும் முன்னாள் புலி பெண் உறுப்பினர்களுக்கு இப்பயிற்சியை முதற்கட்டமாக வழங்கப்படுகின்றது.

இப்பயிற்சி வகுப்புகள் இலங்கை வர்தக மற்றும் கைத்தொழில் பெடரேசனின் ஒத்துழைப்புடன் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இப்பயிற்சி நெறியில் 60 பேர் கலந்து கொன்டுள்ளனர் எதிர்காலத்தில் இவர்களுக்கு உயர் தொழில்வாய்பைப் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பத்தை உருவாக்குவதாகவும் புனர்வாழ்வு நாயகம் தெவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக