புதன், 8 செப்டம்பர், 2010

4 வது ஈழப்போர் காலத்தில் கடற்புலிகள்100 வரையிலான மேர்குரூசியர்ஸ் இயந்திரங்களை

முள்ளிவாய்க்காலில் அதிசக்தி வாய்ந்த அமெரிக்க படகு இயந்திரங்கள் கண்டுபிடிப்பு

முள்ளிவாய்க்காலில் கடற்படைப் புலனாய்வுத்துறையினரால் சில நாட்களுக்கு முன்னர் மீட்கப்பட்ட படகுகளுக்கான நான்கு உள்ளக இயந்திரங்களும் (inboard engines) அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டவை என்று சிறிலங்கா கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடற்புலிகள் சக்திமிக்க தாக்குதல் படகுகளுக்காக அவற்றை கொண்டு வந்திருப்பதாகவும், இவை கடற்படைக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவையாக இருந்தன என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

‘மேர்குரூசியர்ஸ்’ (Mercruisers) என்ற இந்த உள்ளக படகு இயந்திரங்கள் நான்கும் மிகவும் நல்ல நிலையில் மீட்கப்பட்டுள்ளன.

நான்காவது கட்ட ஈழப்போர் காலத்தில் சுமார் 100 வரையிலான இத்தகைய மேர்குரூசியர்ஸ் இயந்திரங்களை கடற்புலிகள் கொள்வனவு செய்திருக்கலாம் என்றும் அவற்றில் பல கடலில் மூழ்கடிக்கப்பட்ட புலிகளின் ஆயுதக்கப்பல்களில் இருந்தபோது அழிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கடற்படை வட்டாரங்கள் கூறியுள்ளன.

கடற்புலிகள் தமது 70 அடி நீளமுள்ள மற்றும் 55அடி நீளமுள்ள அதிவேகத் தாக்குதல் படகுகளில் தலா மூன்று இத்தகைய இயந்திரங்களைப் பொருத்தி வடக்கு, கிழக்கு, வடமேற்கு கடற்பரப்புகளில் கடற்படையினருடனான சண்டைகளை நடத்தியதாக கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நான்காவது கட்ட ஈழப்போர் காலத்தில் சிறிலங்கா அரசாங்கம் அமெரிக்காவிடம் இருந்து பத்து ’மேர்குரூசியர்ஸ்’ இயந்திரங்களை கொள்வனவு செய்தது. அவை 350 குதிரை வலுக்கொண்டவை.
ஆனால் புலிகள் அவற்றைவிட வலிமையான 550 குதிரைவலுக் கொண்ட இயந்திரங்களைப் பெருமளவில் கொள்வனவு செய்துள்ளனர்.

கடற்படையினரின் பாரிய துருப்புக்காவிக் கப்பலான ’ஜெட்லைனரை’ மூழ்கடிக்கும் நோக்கில் கடற்புலிகள் ’மெர்குரூசியர்ஸ்’ இயந்திரங்கள் பொருத்தப்பட்ட ’கத்தி’ என்ற பெயரிலான இருபது தற்கொலைத் தாக்குதல் படகுகளை வடிவமைக்கத் திட்டமிட்டிருந்தனர்.

அவற்றில் நான்கு படகுகள் தயாரிக்கப்பட்டிருந்த நிலையில் முள்ளிவாய்க்காலில் ’பாரா - 3’ கப்பல் அருகே கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.

இராணுவமும் விசேட அதிரடிப்படையும் கூட இதேபோன்ற இயந்திரங்களை ஏற்கனவே கண்டுபிடித்துள்ளன.

அதேவேளை இந்தப் படகு இயந்திரங்களை அமெரிக்காவில் இருந்து கொள்வனவு செய்தது யார் என்ற விபரத்தைப் பெறுவதன் மூலம் ஆயுத விநியோக வலைப்பின்னலைக் கண்டுபிடிக்கலாம் என்று பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
courtercy :http://tamilwin.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக