பியசென வரிசையில் மேலும் சில கூட்டமைப்பு பா.உ.கள் விரைவில் அரசில் இணைவு!
தமிழ் தேசியம் பேசி பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள கூட்டமைப்பினரில் பலர் விரைவில் அரசின் பக்கம் தாவவுள்ளதாக தெரியவருகின்றது. 18வது அரசியல் திருத்த சட்டத்துடன் அரசின் பக்கம் தாவியுள்ள அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பியசேன போன்று மேலும் பலர் அரசுக்கு தாவவுள்ளதாக தெரியவருகின்றது.
வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோதரலிங்கம், சுரேஷ் பிரேமசந்திரன் போன்றோர்கள் அரசுக்கு தாவவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களில் முக்கியமானவர்கள் என்றும் அறியவருகின்றது.
அதேநேரம் ரெலோ அமைப்பைச் சேர்ந்த அடைக்கலநாதன் , விநோதராதலிங்கம் போன்றோர் தற்போது மன்னார் மாவட்டத்திலுள்ள இராணுவ அதிகாரிகளுடன் மிக நெருக்கமாக பழகிவருவதாகவும், பிரதேச மக்களை சந்திப்பதற்கு செல்லும்போதுகூட இராணுவ அதிகாரிகளை தம்முடனே அழைத்துச் செல்வதாகவும் மன்னார் தகவல்கள் தெரிவிக்கின்றன். மன்னார் பிரதேச மக்களுடன் அடைக்கலநாதன் உரையாடுவதையும் அருகில் படை அதிகாரிகள் அமர்ந்திருப்பதையும் படத்தில் காண்கின்றீர்கள்.
இக்கலந்துரையாடலில் மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களும் கலந்து கொண்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக