வியாழன், 23 செப்டம்பர், 2010

புலிகளின் சொத்துக்கள் ,சிறீலங்கா நேரடியத் தலையீடு செய்ய முடியும்

ஐக்கியநாடுகள் சபை அமர்வு - புலிகளின் சொத்துக்கள் பற்றி அதிகாரிகள் மட்டத்தில் தகவல் பரிமாற்றம்?
சிறீலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இதர நாட்டுத் தலைவர்களைச் சந்தித்து சிறீலங்காவின் முன்னேற்றம் குறித்து கருத்துப் பரிமாற்றம் செய்து வரும் இவ்வேளையில் புலிகளின் செயற்பாடுகள் குறித்த கருத்துக்களை சிறீலங்கா அதிகாரிகள் குழு ஒன்று மேற்குலக நாடுகளின் ராஜதந்திரிகளுடன் பரிமாறி வருவதாக மிகவும் நம்பிக்கையாகத் தெரியவருகிறது.ஐக்கியநாடுகள் சபை அமர்வு - புலிகளின் சொத்துக்கள் பற்றி அதிகாரிகள் மட்டத்தில் தகவல் பரிமாற்றம்?சிறீலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இதர நாட்டுத் தலைவர்களைச் சந்தித்து சிறீலங்காவின் முன்னேற்றம் குறித்து கருத்துப் பரிமாற்றம் செய்து வரும் இவ்வேளையில் புலிகளின் செயற்பாடுகள் குறித்த கருத்துக்களை சிறீலங்கா அதிகாரிகள் குழு ஒன்று மேற்குலக நாடுகளின் ராஜதந்திரிகளுடன் பரிமாறி வருவதாக மிகவும் நம்பிக்கையாகத் தெரியவருகிறது. தங்களால் வெல்லப்பட்ட போரின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் பிரகாரம் புலிகளின் சொத்துக்கள் என அடையாளம் காணப்பட்டவைகள் குறித்து இறுதிக்கட்ட நடவடிக்கையில் தாம் இருப்பதாகவும் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றிய விவகாரங்கைள அந்தந்த நாடுகளின் தூதரகத்தினூடான பரிமாறுவது தொடர்பாக இப் பிரஸ்தாபிப்புக்கள் இடம்பெறுவதாக ராஜதந்திர வட்டாரங்களினூடாகத் தெரியவருகிறது.

மேற்படி அடையாளம் காணப்பட்ட சொத்துக்கள் உள்ள நாடுகளில் புலிகள் அமைப்புத் தடை செய்யப்பட்டிருந்தால் அந்தச் சொத்துக்கள் அந்நாடுகளாலேயே சுவீகரிக்கப்படக் கூடிய வாய்ப்பு உண்டு எனவும் அல்லாத விடத்து சர்வதேசப் பொலிசாரினூடாக மேற்படி சொத்தின் உரிமையாளரை “சிவப்புப் பட்டியலில்” இடுவதன் மூலம் அச் சொத்துப் பற்றி விவகாரத்தில் சிறீலங்கா நேரடியத் தலையீடு செய்ய முடியும் என்றும் நம்பப்படுகிறது.

ஐ.நா.வின் போர்க் குற்றவிசாரணை மற்றும் நாடுகளின் கண்டனங்கள் என்பவற்றின் மத்தியிலும் துணிச்சலான முறையில் ஐ.நா. அமர்வில் பங்குகொள்வது என்ற முடிவை எடுத்ததன் மூலம் மகிந்த ராஜபக்சா அநேக உறவுகளைப் புதுப்பித்து தனது நிலைப்பாட்டை விளங்க வைத்துள்ளதாகவும் தெரியவருகிறது.

குறிப்பாக ஜேர்மனிய அதிபர் கத்தார் அதிபர் ஈரானிய அதிபர் நோர்வேஜியப் பிரதமர் உள்ளிட்ட பல பிரமுகர்களைச் சந்தித்துள்ள சிறீலங்காவின் ஜனாதிபதி தனது இன்றைய உரையில் ் பயங்கரவாதத்தின் மத்தியிலும் தாங்கள் எவ்வாறு வளர்ந்துள்ளோம் என ் பேசியதோடு கல்விநிலை மருத்துவம் போன்றவற்றில் சிறீலங்கா மேண்மையடைந்து வருவதாகவும் இளைஞர்களைக் கணணி மயப்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக