புதன், 22 செப்டம்பர், 2010
அதிர்ஷ்டத்தின் உச்சத்தில் திரிஷா கிரிக்கெட்டில் நடக்கும் சூதாட்டத்தின்
அதிர்ஷ்டத்தின் உச்சத்தில் திரிஷா கிரிக்கெட்டில் நடக்கும் சூதாட்டத்தின் காரணமாக மங்காத்தா ஆட்டம் ஆடும் வாய்ப்பை இழந்துள்ளார் நீது சந்திரா.அஜீத் நடிக்கும் மங்காத்தா படத்தில் நீது சந்திரா நடிப்பதாக இருந்தது. அஜீத் ஜோடியாக நடிக்கும் சந்தோஷத்தில் இருந்த நீதுசந்திராவுக்கு ஒரு பேரதிர்ச்சி கிரிக்கெட் சூது வடிவத்தில் வந்துள்ளது.இங்கிலாந்து, பாகிஸ்தான் இடையே நடந்த டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் முகமது ஆசிப் ‘ஸ்பாட் பிக்சிங்’ என்னும்&கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட விவகாரம்தான் இப்போது நீது சந்திராவிற்கும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது.முகமது ஆசிப்பின் காதலியான பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக்,“சூதாட்ட தரகர்களுடன் முகமது ஆசிப் தொடர்புவைத்திருந்த விஷயங்கள் நடிகை நீது சந்திராவுக்கு தெரியும்” என்று ஒரு பெரிய அணு குண்டை போறப்போக்கில்அதன் விளைவால் கிரிக்கெட் ஊழல் தடுப்பு குழுவினர் நீது சந்திராவிடம் விசாரிக்க முடிவு செய்துவிட்டனர். இந்த;&ிரச்சனையால்தான் மங்காத்தா படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளாராம் நீது.நீது வாழ்வில் ஏற்பட்ட பேரதிர்ச்சி, திரிஷாவிற்கு இன்ப அதிர்ச்சியாக மாறிவிட்டது. இவருக்குபபதில் மங்காத்தாவில்இனி நடிக்கவிருப்பவர் திரிஷா என்றத் தகவல் தற்போது திரைவட்டாரத்தில் வலம் வருகிறது.இது பற்றி திரிஷாவிடம் கேட்டால், “ இன்னும் முறையான அறிவிப்பு வரவில்லை அதுவரை பொறுத்திருங்கள்.அண்மைக் காலமாக எனக்கு எதிர்பாராத சந்தோஷங்கள் நிறைய நடக்குது.கமல் சாரின் மன்மதன் அம்பு படத்தில்நடிக்கும் அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளேன்.இப்போது அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பும் அமைந்தால் எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம்தான்” என்றார் அதிர்ஷ்டத்தின் உச்சியில் இருக்கும் திரிஷா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக