ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

ஜெ.வை விமர்சித்த குஷ்புவை கண்டித்து ஆர்ப்பாட்டம

ஜெ.வை விமர்சித்த குஷ்புவை கண்டித்து
அதிமுக பெண் பிரமுகர் கண்டன ஆர்ப்பாட்டமநடிகை குஷ்பு திமுகவில் இணைந்த பிறகு திருவான்மியூரில் கலைஞர் தலைமையில் நடந்த கூட்டத்தில் கன்னிப்பேச்சு பேசினார். அப்போது அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை தாக்கி பேசினார்.
இந்நிலையில் பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில்,ஜெயலலிதாவுக்கு கோவை, திருச்சி கூட்டங்களில் மக்கள் அலைமோதியதாக சொல்கின்றனர். அது மக்கள் கூட்டம் அல்ல.
கடந்த தேர்தலில் தோற்றதும் அவர் வெளியே வரவில்லை. ஓய்வு என்று அறைக்குள்ளேயே இருந்தார். நாலரை வருடங்களாக அவரை பார்க்க முடியவில்லை.
எனவே வேடிக்கை பார்க்க அவரது கட்சிகாரர்களே திரள்கிறார்கள். அவரது தோல்விக்கு கவுண்ட்டவுன் ஆரம்பமாகி விட்டது.
எங்கள் தலைவரை ஜெயலலிதா வம்புக்கு இழுப்பதும் அவரது குடும்பத்தினரை விமர்சிப்பதும் பண்பாடு ஆகாது. எங்களாலும் கீழே இறங்கி பேச முடியும். ஆனால் நாகரீகமாக பேசுங்கள் என்று சமீபத்தில் நடந்த பேச்சாளர் கூட்டத்தில் கலைஞர் கூறியுள்ளார்’’ என்று தெரிவித்துள்ளார்.
>இதனால் ஆத்திரமடைந்த நெல்லை அதிமுக மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் புவனேஸ்வரி இன்று நெல்லை ஜங்சன் பாரதியார் சிலை முன்பு  ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
ஆர்ப்பாட்டத்தின் போது,’’கோடி கோடியாய் சம்பாதித்த பணத்தை காப்பாற்றிக்கொள்ள காங்கிரஸுக்கு ஓடினார் குஷ்பு.  ஆனால் அங்கே உள்ளே நுழைய விடாமல் துரத்தியடித்ததால் திமுகவில் இணைந்தார்.
>அரசியல் பற்றி எதுவும் தெரியாமல் அரசியலுக்குள் நுழைந்துவிட்டார் குஷ்பு. அவர் நேத்து முளைச்ச காளான். இந்த காளான் நாளைக்கு இருக்குமான்னு தெரியாது.
இந்த காளான் எங்க அம்மாவைப்பற்றி பேசுவதா’’ என்று அச்சடித்த காகிதத்தை விநியோகித்தார்.>அப்போது போலீசார் அவரை கைது செய்து, காவல் நிலையத்திற்கு அழைத்துச்செல்லாமலே அங்கேயே வைத்து எச்சரித்து அனுப்பினர்.
புவனேஷ்வரியின் இந்த ஆர்ப்பாட்டத்தால் நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக