செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

140 கோடி வருமானம்:பாகிஸ்தான் கிரிக்கெட் சூதாட்ட தரகர்களுக்கு

இலங்கை வீரர்கள் மீது லாகூரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து பாகிஸ்தானில் எந்த நாட்டு கிரிக்கெட் அணியும் விளையாட செல்வதில்லை.
இதன் காரணமாக பாகிஸ்தான் அணி மற்ற நாடுகளிலும், பொதுவான இடத்திலும் விளையாடி வருகிறது. பாகிஸ்தான் அணி கடந்த ஜூலை மாதம் முதல் இங்கிலாந்தில் விளையாடி வருகிறது. அந்த அணி முதலில் ஆஸ்திரேலியாவுடன் 2 டெஸ்ட் மற்றும் இரண்டு 20 ஓவர் போட்டியில் விளை யாடியது.
அதைத்தொடர்ந்து இங்கிலாந்துடன் 4 டெஸ்டில் விளையாடிவிட்டது. இனி இரண்டு 20 ஓவர் போட்டி மற்றும் 5 ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது.
இந்த தொடரில் மிகப்பெரிய அளவில் “மேட்ச் பிக்சிங்” நடந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுவதன் மூலம் சூதாட்டத்தில் தரகர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.140 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக டெய்லி மிரர் பத்திரிகை தெரிவித்து உள்ளது.
பாகிஸ்தான் வீரர்களை பயன்படுத்தி சூதாட்ட தரகர்கள் பெட்டிங், பிக்சிங் மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து உள்ளனர். இதில் வீரர்களுக்கு ரூ.42 கோடி வரை கொடுக்கப்பட்டு இருக்கலாம் என்று ஸ்காட் லாந்து போலீஸ் தெரிவித்ததாக அந்த பத்திரிகை கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக