செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

சீனாவின் 200 பிரதிநிதிகள் இன்று இலங்கை வருகை

ஒரு புறத்தில் சீனத் தூதுக்குழு மறுபுறத்தில் இந்திய தூதுக்குழு
நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் அடங்களான உயர் மட்டக் குழுவினர் இன்று வட பகுதிக்கு விஜயம் செய்து, அங்கு முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப் பணிகளை பார்வையிட உள்ளனர். இந்திய வெளியுறவுச் செயலாளர் அடங்களாக குழுவினர் நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்கப்பட்டனர். நிருபமா ராவ் இன்று வவுனியா, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் செய்கிறார். மெனிக்பாம் முகாமிற்கு சென்று இடம்பெயர்ந்த மக்களின் நலன்குறித்து நேரில் பார்வையிட உள்ள அவர், பின்னர் மகிழங்குளம் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிகளை அவதானிக்க உள்ளார். யாழ், கிளிநொச்சி ஆகிய பகுதிகளுக்கும் செல்ல உள்ள அவர் அப்பகுதியில் முன்னெடுக்கப்படும் அபி விருத்திப் பணிகளையும் பார்வையிடுவார். நாளை திருகோணமலைக்குச் செல்ல உள்ள நிருபமா ராவ் நாளை மறுதினம் ஜனாதிபதி வெளியுறவு அமைச்சர் ஆகியோரை சந்திப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக