செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

அமிதாப்பச்சன், சிரஞ்சீவி, அனில்கபூர் “விக்” வைத்துள்ளார்கள்; “மேக்கப்” இல்லாமல் செல்லும் ஒரே நடிகர் ரஜினி

மேக்கப் போடாமல் வெளியே செல்லும் துணிச்சல் உள்ள ஒரே நடிகர் ரஜினிதான் என்று கூறி உள்ளார் நடிகர் பிருதிவிராஜ். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:-
 
ரஜினி பயமில்லாத மனிதர். மேக்கப் இன்றி எப்போதும் ரஜினியாகவே இருக்க விரும்புகிறார். அவர் நடித்த படங்களால் கதாபாத்திரங்களால் அவருக்கு கிடைத்த உண்மையான ரசிகர்களின் பலத்தினால் வந்த தைரியம் இது. அவரால் திரைப்படங்கள் மூலம் மக்களிடத்தில் பெற்றுள்ள செல்வாக்கை வேறு எந்த நடிகரும் இதுவரை பெறவில்லை.
 
சிறு வயதிலேயே எனக்கு மம்முட்டி, மோகன்லாலை தெரியும் ரஜினிக்கு என்னிடத்தில் உள்ள பழக்கத்தை விட மம்முட்டி, மோகன்லாலுக்கு என்னிடம் உள்ள பழக்கம் அதிகம். சிறு வயது முதல் அவர்கள் மடியில் வளர்ந்தவன் நான். ஆனால் அவர்கள் என்னுடைய ஒரு படத்தை கூட பாராட்டியது இல்லை. ரஜினி அப்படி இல்லை. இப்போதும் ஞாபகம் இருக்கிறது. கோழிக்கோட்டில் கார்கி படப்பிடிப்பில் இருந்தேன். காலை 5.30 மணிக்கு உடற்பயிற்சி செய்ய எழுந்தபோது எனது போனில் சென்னை லேன்ட் லைனில் இருந்து 23 மிஸ்டுகால் இருந்தது. காலை நேரத்தில் கூப்பிட வேண்டாம் என்று உடற்பயிற்சிக்கு சென்றேன். 6.30 மணியளவில் மீண்டும் அதே நம்பரில் இருந்து அழைப்பு வர எடுத்தேன். பேசியவர் நீங்கள் பிருதிவிராஜா என்றார். ஆம் என்றதும் நேரடியாக ரஜினி பேசினார். 45 நிமிடங்கள் மொழி படத்தின் காட்சிகளை விவரித்து பாராட்டினார். நான் மலைத்து விட்டேன். அப்போதே என் மனதில் ரஜினிக்குள்ள மரியாதை உயர்ந்து விட்டது.
 
பொதுநிகழ்ச்சிகளுக்கு “மேக்கப்” போடாமல் செல்லும் நடிகர் ரஜினிதான். மம்முட்டியோ, மோகன்லாலோ மேக்கப் இன்றி வெளியே வந்தால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். “சீ” என்றுதான் சொல்வார்கள். மிகப்பெரிய நடிகர்களான அமிதாப்பச்சன், அனில்கபூர், சிரஞ்சீவி போன்றோரும் விக் வைத்து மேக்கப் போட்டுத்தான் வெளியே வருகிறார்கள்.
 
ரஜினி தனித்துவம் உள்ள மனிதர். பயமில்லாதவர். அவர் மக்களிடத்தில் பெற்றுள்ள செல்வாக்கை வேறு எந்த நடிகராலும் பெற முடியாது.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக