ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

இளங்கோவனை மீது நாம் தமிழர் இயக்கம் பாய்ச்சல்

வாய்க்கொழுப்புடன் பேசிக்கொண்டு திரியும் இளங்கோவன் அரசியலை விட்டு ஒதுக்கப்படுவது உறுதி என்று நாம் தமிழர் இயக்க செய்தி தொடர்பாளர் கூத்தன் கூறியுள்ளளார்.

இதுகுறத்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பெரியாரின் பேரன் என்று கூறிக்கொண்டு பகலிலும் தன்னிலை மறந்து பேசும் குணம் கொண்டவர் சோனியாவின் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இளங்கோவன், சமீபத்திய பேட்டி ஒன்றில் வழக்கம் போல் வாய்க்கு வந்த படி உளறிக்கொட்டி இருக்கின்றார். இதனைப் படித்தால் அவர் இன்னும் அரசியலில் பாடம் கற்கவில்லை என்று தெரிகின்றது.

அவர் தனது பேட்டியில் சில முத்துக்களை உதிர்த்திருக்கின்றார். அவருக்கு நாம் பதில் அளிக்க கடமைப்பட்டுள்ளோம்.
”அண்டை நாடுகளோடு பிரச்னை ஏற்படும்போது சுமுகமாகப் பேசித் தீர்க்க வேண்டுமே தவிர, வன்முறையைத் தூண்டக் கூடாது. இலங்கை அரசு தமிழ் மீனவன் மீது தாக்குதல் நடத்தினால் பேசித்தீர்க்க வேண்டும். ஆனால் சீமான் வன்முறையைத் துண்டுகின்றார் என்று கூறியிருக்கின்றார் தன்னிலை மறந்த இளங்கோ.

சாதாரண மனிதர்கள் இடையே பிரச்சனை இருந்தால் பேசித்தீர்க்கலாம். ஆனால் இங்கு நம் மீனவர்களை அடிப்பதே இலங்கை அரசு தானே, காலம் காலமாக இது நடக்கின்றது. எத்தனை தடவை முறையிட்டும் இது தீரவில்லை. இலங்கை அரசு துளி கூட கேட்க வில்லை. இந்தநிலையில் சீமானைக்குறை கூறுவதை விட்டு விட்டு இதனைத்தடுக்க துப்பில்லாத அவர் ”அன்னை” என்று கூறிக்கொண்டு திரியும் சோனியாவை கண்டனம் செய்வதே உண்மையாக இருக்கும்.

இது போக அவருக்கு நாம் சொல்லிக்கொள்வதற்கு நிறைய இருந்தாலும் சிலவற்றை மட்டும் கூற விரும்புகின்றோம்.

சென்ற தேர்தலில் மான மறவன் முத்துக்குமார் மரணத்தை கொச்சைப்படுத்தியதாலும், ஈழப்போருக்கு எதிராக காங்கிரஸ் பேருதவி செய்ததாலும் தமிழ் மக்கள் சீமானின் தலைமையில் அவருக்கு நல்ல பாடம் அளித்தார்கள். அதன் பின்னாவது அவர் பாடம் கற்றிருக்க வேண்டும்.

ஆனால் அதன் பின்னும் அவர் பாடம் கற்க வில்லை என்று தெரிகின்றது. மாறாக வாய்க்கொழுப்புடன் இன்னும் பேசிக்கொண்டு திரிகின்றார். இதே நிலை தொடர்ந்தால் வரும் தேர்தலுடன் அவர் அரசியலை விட்டே ஒதுக்கப்படுவது உறுதி என்று நாம் தமிழர் இயக்க செய்தி தொடர்பாளர் கூத்தன் கூறியுள்ளளார்.

Comments poopathi 
தமிழ் நாட்டு அரசியல்வாதிகளில் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில நேர்மையானவர்களில் இளங்கோவன் முதன்மையானவர்.பெரியாரின் பேரன் என்ற தகுதி அவருக்கே மிகச்சரியாக பொருந்தி இருக்கிறது.சந்தர்பவாதம் அவரிடம் இல்லை. யதார்த்தவாதி வெகு ஜன விரோதி என்ற கருத்துக்கு உரித்தானவர்.
ஈழவிவகாரங்களில் சரியான அணுகுமுறை கொண்டிருப்பவர்,யாருக்கும் பயப்படாமல் நெஞ்சில் துணிவோடு ஆணித்தரமாக தன கருத்துக்களை எப்பொழுதும் சொல்லத்தயங்கதவர்.
சீமா நெடுமாறன் வைக்கோ போன்றவர்கள் இளங்கோவனின் கால்தூசிக்கு கூட நிகராக மாட்டார்கள்.கூலிக்கு மாரடித்து மாரடித்து நம்பியவர்களை நடுக்கடலில் தள்ளியவர்கள் எல்லாம் இளங்கோவனை பற்றி பேசுவது விந்தை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக