இந்நிலையில் இந்த தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். இதனால் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்த தேர்தல் 20 ம் தேதி முதல் 29 ம் தேதி வரை நடப்பதாக இருந்தது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று துவங்கும் என தொண்டர்கள் பலர் தயாராக இருந்தனர். இந்நிலையில் இந்த தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி ரவி மல்லு தெரிவித்துள்ளார்.
தமிழக காங்., தலைவர் தங்கபாலு கால அவகாசம் கேட்டதற்கிணங்க இந்த தேர்தல் ஒத்திவைக்ப்பட்டுள்ளது. தேர்தல் நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறியுள்ளார்.
காரணங்கள் இல்லாமலா ; கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இளைஞர் காங்., தேர்தல் நடந்தபோது கோஷ்டி பூசல் காரணமாக சிறு, சிறு மோதல் நடந்தது நினைவிருக்கலாம். மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் ஒத்தி வைப்புக்கு சில மறைமுக காரணங்கள் இல்லாமல் இருக்க முடியாது. இருப்பினும் சமீபத்திய தள்ளிவைப்பு மூலம் கோஷ்டி பூசல் தற்காலிகமாக வெடிக்காமல் இருக்கும்.
KThirumalairajan - Rajakilpakkam,இந்தியா
2010-07-18 17:12:01 IST
காங்கிரஸ்காரர்கள் நண்டு மாதிரி!மேலே வருகிறவரை கீழே இழுப்பதில் வல்லவர்கள்!எனவே அங்கே கோஷ்டி கானம் எப்போதும் கேட்கலாம்!அவ்வப்போது வீராவேசமாக அதுவும் விளம்பரத்திற்காக காட்டிகொள்வார்கள்;அவ்வளவே!...
R Gopalakrishnan - Aruppukottai,இந்தியா
2010-07-18 16:58:41 IST
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக