புதன், 29 ஏப்ரல், 2026

Exit Poll 2026: 234 தொகுதிகளில் மக்கள் வாக்களித்தது எந்த கட்சிக்கு? ஆட்சி அமைக்க போவது யார்? மின்னம்பலம் Exit Poll 2026:

May be an image of text that says "TN ELECTION E- 本 d PREDICTION 2026 Before the exit polls, we are confidently predicting: DMK (Dravida Munnetra Kazhagam) 200+ SEATS 45%- 45%-50% 50% VOTE VOTESHARE SHARE We Dravidians AIADMK 30+ (All India Anna Dravida Munnetra Kazhagam) SEATS 30% VOTE SHARE OTHERS & INDEPENDENTS WON'T EVEN QUALIFY TO GET THEIR DEPOSITS BACK. MAY 4 TH LET'S DISCUSS THIS AGAIN ON MAY 4TH. This isa prediction based on our analysis and ground assessment. Not an exit poll official survey."

 மின்னம்பலம் - Mathi : 17-வது தமிழக சட்டசபை தேர்தல் எனும் மிகப் பெரிய ஜனநாயக திருவிழாவில் நமது மின்னம்பலம் மீடியாவும் இணைந்துள்ளது.
2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது மின்னம்பலம் மீடியா மிக துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டிருந்தது. தேர்தல் ஆணையத்தின் வாக்கு எண்ணிக்கையின் முடிவுகளும் நமது மின்னம்பலம் கருத்து கணிப்பு முடிவுகளைப் போலவே மிக சரியாக அமைந்திருந்தன.
இதனைத் தொடர்ந்து தற்போதைய தமிழக சட்டசபை தேர்தல் களத்திலும் நமது மின்னம்பலம் மீடியா களமிறங்கியது.
கடந்த மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகளை ஏப்ரல் 9-ந் தேதி வெளியிட்டது.



இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 23-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்று முடிவடைந்தது.

இந்த வாக்குப் பதிவுக்கு பின் ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் 200 பேர் வீதம் 234 தொகுதிகளிலும் 46,800 பேரிடம் யாருக்கு வாக்களித்தீர்கள்? என கேட்கப்பட்டது.

வாக்குப் பதிவுக்கு பிந்தைய இந்த கருத்து கணிப்பின் போது பல்வேறு சுவாரசியங்களை நாம் எதிர்கொண்டோம். யாருக்கு வாக்களித்தீர்கள் எனில் யாருக்கு ஓட்டுப் போட வேண்டும்? எவ்வளவு பணம் கொடுப்பீர்கள்? என்பது போன்ற கேள்விகளைக் கூட நாம் எதிர்கொண்ட இடங்களும் உண்டு.

234 தொகுதிகளிலும் வாக்குப் பதிவுக்குப் பின்னர் நடத்தப்பட்ட கருத்து கணிப்பு- எக்ஸிட் போல் Exit Poll முடிவுகள் ஏப்ரல் 29-ந் தேதி மாலை 6.30 மணிக்கு
https://minnambalam.com/ இணையதளத்திலும்
மின்னம்பலம் யூடியூப் சேனலான
https://www.youtube.com/@minnambalam -ல் மக்களின் பார்வைக்கு வெளியிடுகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக